
மீண்டும் மாஸ்க் -கா?
சென்னைக்கு வந்த சீனப் பிசாசு
- By --
- Monday, 06 Jan, 2025
சீனாவில் பரவி வரும் HMPV நோய் தொற்று இந்தியாவிலும் பரவும் அபாயம் உள்ளது.
பெங்களூரில் 8 மாதக் குழந்தைக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எந்த ஒரு பயண வரலாறும் இல்லாத குழந்தைக்கு இந்த நோய் தொற்று வந்துள்ளதை கர்நாடக சுகாதாரத் துறை மிகவும் எச்சரிக்கையுடன் அணுக ஆரம்பித்துள்ளது. அந்தக் குழந்தை தற்போது தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இது குறித்த விபரங்களை, இந்திய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சுவாச மற்றும் பருவகால காய்ச்சல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் இது குறித்து சர்வதேச நோய் தடுப்பு மையங்களுடன் தகவல்களை பரிமாறி வருகிறது என இந்திய ஹெல்த் சர்வீஸ் டைரக்டர் ஜெனரல் அதுல் கோயல் தெரிவித்தார்.
சென்னை சிறுவனுக்கும், சேலத்தில் இளைஞருக்கும் என, தமிழ்நாட்டில் இருவருக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது என மாநில சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
எழில் - தெய்வீகன் - கீழ்பாக்கம்