Vannappalagai 24X7
பசுமைப் பூங்கா - 100-வது நாள்.
Tuesday, 29 Oct 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

தித்திக்கும் தீம் பார்க் -2024
( பசுமைப் பூங்கா - 100- வது நாள்   

ஒரு பஜ்ருக்கு எழுந்து தொழுத கையோடு மரக் கன்று, மண் வெட்டி, கடப்பாறை- என களத்தில் இறங்கிய பசுமை பள்ளபட்டி நண்பர்கள், இந்த ஒன்பது ஆண்டு கால ஓட்டத்தில் பசுமை பள்ளபட்டி அறக்கட்டளை- யாக பரிணமித்துள்ளார்கள். இந்த இடைப்பட்ட காலக் கட்டத்தில், ஊரின் தெற்கே புதிதாக அமைந்துள்ள புதிய ஈத்கா திடலில் சுமார், 5 லட்சம் லிட்டர் அளவு மழை நீரை சேமிக்கும் மிகப் பெரிய சேமிப்புக் குளத்தை உருவாக்கி உள்ளார்கள். பின் அதே ஈத்கா திடல் எங்கும் சுமார் 400- க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகளை நட்டு வைத்துப் பராமரித்து மரங்களாக்கி இன்றைக்கு அந்த திடலையே மிக அழகிய "குறுங்காடு"- போல் மாற்றி விட்டார்கள். 

???? 

இந்த இரண்டு மைல்கற்களை கடந்து இப்போது மூன்றாவது மைல் கல்லலாக..... 

இப் புதிய அறக்கட்டளையானது, மிகப் பெரிய பொருட் செலவில் ஒரு அழகிய பூங்கா ஒன்றை உருவாக்கியுள்ளது. 

???? 

"பசுமை பூங்கா"* எனும் இந்த பூந்தோட்டத்தில் நுழைந்த மாத்திரத்தில் பொங்கும் நீரூற்று நம்மை வரவேற்கிறது. பின் அணி வகுத்து நிற்கும் மரக் கன்றுகள்,  ஆங்காங்கே பூத்திருக்கும்  பூச்செடிகள்,  கன கச்சிதமாக வெட்டப்பட்ட புல்வெளிகள் - என திரும்பி திசை எங்கும் பசுமை பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அத்துடன், நடைப் பயிற்சிக்கான நீண்ட நடைமேடைகள் பூங்காவின் உள் வட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பாதை எங்கும் உயரமான கம்பங்கள்   ஊன்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. போலவே,  குழந்தைகளுக்கான சறுக்கு மரங்கள், ஊஞ்சல்கள், ராட்டினங்கள், சாய் பலகைகள், குதிக்கும் மேடைகள் -என குதூகுலங்கள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கிறது.

???? 

இதன் கண்,.....

இதுவொரு வழக்கமான பூஞ்சோலைப் பூங்காவாக மட்டும் நின்று விடாமல், குழந்தைகளுக்கான பொழுது போக்குப் பூங்காவாகவும், பெரியவர்களுக்கான புத்துணர்வுக் கூடங்களாகவும் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. 

???? 

ஆண்கள், பெண்கள், மாணவ- மாணவிகள் என அனைவரிடமும் நீக்கமற நிறைந்திருக்கும் மன அழுத்தங்களைத் தளர்த்தவும், நம்மை நாமே அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளவும் இந்தப் புதிய பூங்கா நமக்கெல்லாம் ஒரு  மா-மருந்தாக வாய்த்துள்ளது. எனவே, பள்ளபட்டி மக்களாகிய நாம் இந்த பசுமைப் பூங்காவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி மகிழ வேண்டும். அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் இந்த அறக்கட்டளை சிறப்பாக செய்து வைத்துள்ளது. இதனை கட்டுக் கோப்பாக பராமரிக்கும் பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது. 

இன்றைய வணிகமயமான உலகில், சுமார் 21,000  சதுர அடி நிலப்பரப்பில் இப்படியொரு அழகான *சூழலியல் பூங்கா*- வை அமைப்பதற்கு ஒரு தனி "மனசு"- வேண்டும். அந்த "மனசு"- இந்த பசுமை பள்ளபட்டி அறக்கட்டளை நண்பர்களிடம் இருக்கிறது. எனவே, அவர்களுக்கான முழு ஒத்துழைப்புகளை நாம் தர வேண்டும். அதனைக் கொண்டு அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பள்ளபட்டி நகரம் மேலும் பசுமையாக மாற வேண்டும். நமது நகரத்தின் எதிர் வரும் தலைமுறைகள் "சூழலியல் சிந்தனை"-யோடு வளர வேண்டும். 

வாழ்த்தி மகிழும்

???? 

*வண்ணப்பலகை* 
மின்னிதழ் 
( 20, ஜூலை, 2024) 

????????????????????????????????????????????