Vannappalagai 24X7
அமெரிக்காவிற்கு பெண் அதிபர் கிடைப்பாரா?
Tuesday, 05 Nov 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

ஹிலாரி விட்ட இடத்தை ஹாரீஸ் பிடிப்பாரா? 

நடந்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் இந்நாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிக வாக்குகளைப் பெற்றாலும் போதிய எலக்டோரல் வாக்குகள் பெற முடியாமல் போகலாம். இப்படி எல்லாம் நடந்து இருக்கிறதா எனக் கேட்டால்.. 

ஆம்! கடந்த 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் கூட  இதே குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்பை காட்டிலும்  ஜனநாயக கட்சியின் அன்றைய வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் சுமார் 28 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். ஆனாலும், "எலக்ட்ரோல் மாகாணங்கள்"- என்ற வகையில் அதிக மாகாணங்களில் வென்றதால் டிரம்பிற்கு 304 எலக்டோரல் வாக்குகள் கிடைத்தன. ஹிலாரிக்கு 227 எலக்டோரல் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தற்போதுள்ள நிலையை வைத்து பார்க்கும் போது மீண்டும் இதேபோன்ற நிகழ்வு ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.  

அது சரி! அது என்ன எலக்ட்ரோல் மாகாணங்கள் ? 

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளரின் வாக்கு சதவீதம் எத்தனை மாகாணங்களில் அதிகமாக இருக்கிறதோ அதனை "எலக்ட்ரோல் மாகாணங்கள்"- என வரையறை செய்துள்ளார்கள். இதன் படி, அதிக வாக்கு சதவீதம் பெற்ற வேட்பாளர் அதிகமான "எலக்ட்ரோல் மாகாணங்களின் எண்ணிக்கையையும் பெற வேண்டும். அப்போது தான் வெற்றியை உறுதி செய்ய முடியும். எனவே, இந்த இரண்டிலுமே முன்னணி பெற்று வெற்றி பெறப் போவது யார் ?  

முன்னாள் அதிபரா? 
இந்நாள் துணை அதிபரா?  

ஹிலாரியை வென்றது போல் ஹாரீஸையும் ட்ரம்ப் வெல்வாரா ? அல்லது, ஹிலாரி தவற விட்ட வெற்றி வாய்ப்பை ஹாரீஸ் தட்டிப் பறித்து ட்ரம்ப்பை வீட்டுக்கு அனுப்புவாரா ? 

300 ஆண்டு கால தேர்தல் வரலாற்றைக் கொண்ட அந்த அமெரிக்க தேசத்திற்கு முதல் பெண் அதிபர் கிடைப்பாரா? 
இன்று மாலைக்குள் தெரிந்து விடும்.  

ஷரீப். அஸ்கர் அலி
( 05, நவம்பர், 2024 )