Vannappalagai 24X7
எல்லை கடந்த சுவை பங்காளி நாட்டு உப்பு
Wednesday, 06 Nov 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

கொச்சி, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள உப்பு பதப்படுத்தும் நிலையங்களில் இருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கல் உப்பு அனுப்ப பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள இந்த பதப்படுத்தும் நிலையங்களுக்கு பாக்கிஸ்தானிலிருந்தே  கல் உப்பு பாளங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.  

அந்நாட்டில் உள்ள மேற்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜீலம் மாவட்டத்தில் கெவ்ரா என்ற உப்புச் சுரங்கம் உள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய உப்புச் சுரங்கம். இங்கே ஆண்டிற்கு 4.5 லட்சம் டன் கல் உப்பு வெட்டி எடுக்கப் படுகிறது. அதில் 75% அளவு கல் உப்பு இந்தியாவிற்கு ஏற்றுமதியாகிறது.  

உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு கடலில் இருந்து காய்ச்சி எடுக்கப்படும் கல் உப்பு மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. எனவே, இது போன்று வெட்டி எடுக்கப்படும் கல் உப்புகளும் தேவைப்படுகிறது. குறிப்பாக, இந்தியர்களின் மத சடங்குகளின் போது மேற் கொள்ளும் விரதங்களின் போது இந்த கல் உப்புக்கள் அவசியம் தேவைப்படுகிறது.   

என்ன மக்களே! 
நாம் சாப்பிடும் உணவிலும், மதவழிபாடுகளிலும் பக்கத்து நாட்டு கல் உப்பு கலந்து உள்ளதை மறந்து விட வேண்டாம்.  

By....
கிள்ளியூர் இளஞ்செழியன்