Vannappalagai 24X7
காத்திருக்கும் 1500 இருக்கைகள் வரவேற்கும் வங்கிப் பணி!
Friday, 08 Nov 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

தமிழில் எழுத தெரிந்தால் போதும்: யூனியன் வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் காத்திருக்கும் 1500 பணியிடங்கள்
யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மஹாராஸ்டிரா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 வங்கி அலுவலர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது விண்ணப்பத்தை வருகின்ற 13ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலி பணியிடம்

மொத்தமாக 1,500 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 200 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480 - ரூ.85,920 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பிக்க கடைசி தேதியான 13ம் தேதியின்படி விண்ணப்பதாரர் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மாநில அலுவல் மொழியில் பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இணையதளம் வாயிலாக எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள், தேர்வு நுழைவுச்சீட்டு உள்ளிட்டவை மின்னஞ்சல் மூலம்  அனுப்பப்படும். 

ZEBRA Media - Chennai