Vannappalagai 24X7
மணித் துளிகளால் ஒரு மாளிகை காலத்திற்கு ஏற்ற சித்திரம்
Friday, 08 Nov 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

எத்தனை ஆண்டு கால உழைப்பு? 
எத்தனை, எத்தனை தகவல்கள் ? 
விபரம் தெரிந்த நாள் முதலாக... பார்த்த திரைப்படங்களை எல்லாம் மனதிற்குள் பட்டியல் இட்டு செய்த வேலை.  

மேலே சொன்ன இத்தனை கூறுகளையும் ஆய்வாளர் அப்சல் ஒரே இடத்தில் குவியப்படுத்தி அங்கு புதியதொரு சித்திரத்தை வரைந்துள்ளார். ஆம் ! இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இன்றைய நிலையை துல்லியமாக காட்டக்கூடிய காலத்திற்கு ஏற்ற சித்திரத்தை வரைந்துள்ளார். அதற்கு "இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்"- எனப் பெயரிட்டு, மிகப் பெரிய கள ஆய்வுகள் கொண்ட கட்டுரைத் தொகுப்பாக அதனை எழுதி வெளியிட்டுள்ளார்.  
புஸ்தகா வெளியீட்டாளர் அழகிய முறையில் அச்சிட்டு வெளியிட்டு உள்ளனர்.  
கலை- இலக்கிய ஆர்வலர்கள். 
சமூக- அரசியல் ஆய்வாளர்கள். 
ஜனநாயக சக்திகள் - என அனைத்து தரப்பினர்களும், மாற்று சிந்தனையாளர்களும், ஊடக ஆய்வு மாணவர்களும் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய கையேடு. 
உங்கள் பிரதிக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள் 
புஸ்தகா பப்ளிக்கேஷன். 
செல்: +91 99803 87852 
விலை: ₹ 320/ -- 

@வண்ணப்பலகை 
(09, நவம்பர், 2024)