16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சோஷியமீடியா எனும் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை. இதற்கான புதிய சட்டம் ஒன்றை தமது நாட்டில் கொண்டு வரப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் இப் புதிய சட்டம் இயற்றப்பட்டுவிடும். 12 மாதங்களுக்குப் பிறகு இச்சட்டம் அமலுக்கு வரும். தற்போது சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களை இது கட்டுப்படுத்தாது. புதிதாக சமூக வலைதளங்களை பயன்படுத்த முனைகின்ற இளநிலை சிறார்களின் செயல்களை இச்சட்டம் தடுக்கும். பெற்றோர்களின் அனுமதி இருந்தாலும் கூட, இள நிலை சிறார்களுக்கு அனுமதி இல்லை என அச் சட்டம் திட்ட,வட்டமாக கூறுகிறது.
16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கண்டறியும் போது, அந்த சிறார்களையோ அல்லது அவர்களின் பெற்றோர்களையோ இச்சட்டம் கட்டுப்படுத்தாது. மாறாக சமூக வலைதள நிறுவனங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என
அச் சட்டம் கூறுகிறது
கிள்ளியூர் இளஞ்செழியன். சென்னை