Vannappalagai 24X7
நமது ஊர் நமது வங்கி வரவேற்கும் வங்கிப் பணிகள்
Sunday, 10 Nov 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை.. 170 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? விவரம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்...

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். முன் அனுபவம் கட்டாயம் இல்லை. எனினும் அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.72,061 வழங்கப்படும்.

ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்பட பெருநகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: 
தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை 
ஒருமுறை படித்து அறிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. (https://www.tmbnet.in/) என்ற 
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.1,000-ஆகும். ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடந்த 6.11.2024 அன்று அவகாசம் தொடங்கியது. அவகாசம் முடிவடையும் நாள் 27.11.2024 ஆகும். ஆன்லைன் வழியான எழுத்து தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும். எழுத்து தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் / ஜனவரி 2025 க்குள் வெளியிடப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: 
https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP.pdf

வண்ணப்பலகை