Vannappalagai 24X7
பரவலாகும் வேலை வாய்ப்புகள் நாமக்கல் சொல்லும் நல்ல சேதி!
Tuesday, 12 Nov 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை பணிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடை பெறும் இந்த முகாம் காலை 10:30 மணி அளவில் தொடங்கி  மாலை 5 மணி வரை நடைபெறும்.  இதில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளஞிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன் அடையலாம்.

கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேறியவர் மற்றும் தவறியவர்,  
12ஆம் வகுப்பு தேறியவர் மற்றும் தவறியவர், 

டிப்ளமோ படிப்பு படித்தவர், 

கணினி பயிற்சி பெற்றவர், 

இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரிகள்

பணி விபரங்கள்: மேனேஜர், ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், கேஷியர், மார்க்கெட்டிங், எக்ஸிகியூட், டீம் லீடர், சூப்பர்வைசர், ஏரியா மேனேஜர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்டன்ஸ் -போன்ற பல்வேறு பணிகளுக்கு கலந்தாய்வும் நேர்முகத் தேர்வும் நடைபெற உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தொலைபேசி எண் 
04286 222 260 

மேற்கண்ட தகவலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி உமா அவர்கள் செய்தியாளர்களோடு பகிர்ந்து கொண்டார்.  இந்த நேர்முகத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் செய்து தரும். படித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களும், பணியார்களை தேடிக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களும் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். 

கிள்ளியூர் எழில் - சென்னை.