Vannappalagai 24X7
குளிர் காலக் கொடைகள். பசுமை "பட்ஜெட்"
Tuesday, 12 Nov 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

குளிர் காலங்களில் கேரட், பீட்ரூட், நூக்கல், டர்னிப்ஸ், முள்ளங்கி போன்ற மண்ணுக்குள் விளையும் காய்கறிகள் அதிகமாக விளையும். உயரமான மலைத் தோட்டங்களிலிருந்து காய் கறி மார்க்கெட்டிற்கு வரும் இந்த வகை "ரூட் வெஜிடபிள்"-கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், சுவாசத்திற்கு புத்துணர்ச்சியாகவும், பார்த்ததும் பரவசம் ஊட்டும் பச்சை வாசத்துடனும் காணப்படும். 

மனதிற்கு இதமான இந்த வகை வேர்-கிழங்குக் காய் வகைகள், அதன் தோற்றப் பொழிவைப் போலவே மிகுதியான சத்துக்கள் அடங்கியவை. எனவே, இதன் விளைச்சல் அதிகமாகவும், விலை குறைவாகவும் உள்ள குளிர் சீசன் நேரங்களில் நமது அன்றாட உணவுகளில் இவற்றை நாம் அதிகமாக இணைத்துக் கொள்ள வேண்டும். 

குறிப்பாக, உணவுகளாக மட்டுமே சமைத்து சாப்பிடாமல், நேர்த்தியாக நறுக்கப்பட்ட  சாலேட்களா மாற்றி சாப்பிடலாம். அதே போன்று, மிக்ஸியில் நன்கு அரைத்து சத்துள்ள சாறுகளாகவும் பருகலாம். இப்படியான, மாற்று வழிமுறை உணவுகளை குழந்தைகள் மிகவும் விரும்பி உட் கொள்வார்கள். சமைக்கப் படாத பச்சையான வழிமுறை என்பதால் அவர்களுக்கு தேவையான போஷாக்குகள் முழுமையாக கிடைத்து விடும்.  இதனால், குறைந்த செலவில் நிறைந்த பலன்களை நாம் பெற்றுக் கொள்ளலாம்.  

நமது உணவு முறைகளை இப்படி நேரத்திற்கு ஏற்ப திட்டமிட்டு பயன் உள்ள வகையில் அமைத்துக் கொள்ளும் போது, உணவுக்கான சிலவுகள் குறையும். அதே வேளையில், தேவையற்ற மருத்துவச் செலவுகளும் குறையும். இதனால் நமது மாதாந்திர பட்ஜெட்டும் ஒரு கட்டுக்குள் நிலைத்திருக்கும். 

ஷரீப். அஸ்கர் அலி - எடிட்டர்