தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன் 14 நவம்பர் 1999 "உழவர் சந்தை திட்டம்" தொடங்கப்பட்டது.
விவசாயிகள் பயிரிடுபவற்றை அவர்களே நேரடியாக விற்பனை செய்யும் திட்டமான 'உழவர் சந்தை திட்டம்' மு.கருணாநிதியால் மதுரை அண்ணா நகரில் தமிழகத்தின் முதல் “உழவர் சந்தை” துவக்கி வைக்கப்பட்ட தினம் இன்று.
புத்தம் புதுக் காய்கறிகள்,
இடைத்தரகர்கள் கிடையாது,
கடை வாடகை கிடையாது,
விளைப் பொருட்களை ஏற்றிவர அரசு பேருந்தில் கட்டணம் கிடையாது.
தொடர்ந்து இத்திட்டத்தின்படி "உழவர் சந்தைகள்" தமிழகம் முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது. இதனால் காய்கறிகளை விளைய வைக்கும் வேளாண் குடி மக்கள் முழு பயன் அடைந்தார்கள். பொது மக்களுக்கும் குறைவான விலையில் காய் கறிகள் கிடைக்கிறது.
முதல் சந்தை மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் நாடு முழுக்க இன்றைக்கு இருநூறுக்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் உருவாகி விட்டன.
பஷீர் அஹமது - ஆத்தூர்