Vannappalagai 24X7
அனைத்து தரப்பு மக்களையும் நோக்கி.... மகளிர் உதவித் திட்டத்தில் அதிரடி மாற்றம்.
Wednesday, 13 Nov 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

கலைஞர் மகளிர் நிதி உதவித் திட்டத்தில் அதிரடி மாற்றம்.  

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அறிஞர் அண்ணா பிறந்த நாள் முதல் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி ஊக்கத் தொகை வேண்டி விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன. அப்படி விண்ணப்பித்த  பொது மக்களின் குடும்ப அட்டைகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த பரிசீலனையின் போது 1கோடியே 6 லட்சத்து, 52,000 பேர் பயனாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த பரிசீலனையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மறு ஆய்வு செய்து மேலும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளர்கள் இத்திட்டத்தோடு இணைக்கப்பட்டார்கள்

தற்போது ஒரு கோடியே 8 லட்சம் பயனாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். 

 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இனி எதிர் வரும் ஆண்டுகளில் இந்த கலைஞர் மகளிர் நிதி உதவி திட்டத்தினால் மேலும் 8 லட்சம் பயனாளர்கள் பயனடைவார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த அதிரடி மாற்றத்தால் மொத்தம் 1கோடியே 16 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் அடைவார்கள். 

இந்தியாவிற்கே முன் மாதிரியான இந்த கலைஞர் மகளிர் ஊக்கத் தொகை நிதியானது இனி அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் என தமிழ்நாடு கூட்டுறவு & பொருள் வழங்கல் துறை அமைச்சர் K.K.S.S.R ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜீப்ரா மீடியா. சென்னை