Vannappalagai 24X7
பழைய தோற்றம் - புதிய மாற்றம் கோவை மாநகரின் புதிய முகம்
Thursday, 05 Dec 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

20 ஆண்டு டெக்ஸ்டைல் தொழிற்சாலையை மாடர்ன் ஆபீஸ் ஆக மாற்றிய ரீகஸ்..!

30 ஆண்டுகளுக்கும் மேலாக, ரீகஸ் நிறுவனம் நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் பணியாற்ற ஏற்ற இடத்தை கண்டுபிடித்து உருவாக்கும் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ரீகஸ் 154 இடங்களில் அலுவலக இடம், கோவொர்க்கிங் ஸ்பேஸ் மற்றும் விர்ச்சுவல் அலுவலகங்கள், மீட்டிங் ரூம் ஆகியவற்றை வழங்குகிறது. டெக்ஸ்டைல் துறையில் பெருமைமிக்க கோவை நகரம் சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது.

சரவணம்பட்டியில் உள்ள 20 ஆண்டு பழமையான பழுதடைந்த டெக்ஸ்டைல் தொழிற்சாலையை, ரீகஸ் நிறுவனம் நவீன அலுவலக இடமாக மாற்றியமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்திற்கு புதிய பரிமானத்தை கொடுத்துள்ளது. "

"8 மாத கால புனரமைப்பு திட்டத்தில் டெக்ஸ்டைல் தொழிற்சாலையின் கட்டமைப்பை எவ்விதமான மாற்றமும் செய்யாமல், அதே நேரத்தில் கட்டிடத்திற்குள் நவீன வடிவமைப்புகளை கொண்டு அலுவலக இடம் உருவாக்கப்பட்டு உள்ளது. 

இந்த மாற்றத்தின் பின்னால் உள்ள கட்டிடக் கலைஞர்கள் பழைய மற்றும் புதியவற்றை திறமையாக இணைத்து, செயல்பாட்டு ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் சிறப்பான பணி இடத்தை சரவணம்பட்டியில் உருவாக்கியுள்ளனர். இந்த கட்டிடத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ரீகஸ் கோவையில் 4 அலுவலக இடங்களை கொண்டுள்ளது. 
ஸ்ரீவரி, 
ஸ்ரீமத், 
ஹனுதேவ் இன்போ பார்க் சி பிளாக், 

TNCD ஸ்கொயர், 
சரவணம்பட்டி-துடியலூர் சாலை. 

ரீகஸ் கோவையில் அலுவலக இடங்களை மாதத்திற்கு ஒரு நபருக்கு ரூ.13,290 முதல் ரூ.15,390 வரை ஆரம்ப விலையில் வாடகைக்கு வழங்குகிறது. 

By அமுதன் இஸ்மாயில் - கோவை.