Vannappalagai 24X7
சட்னி + கிட்னி. Dr இட்லி MBBS
Wednesday, 11 Dec 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

இட்லியின் மருத்துவ குணம்:
முன்னோர்கள் கண்டுபிடித்த ஒன்று என்றாலே அதில் நிச்சயம் எதாவது விஷயம் இருக்கும். இட்லி மட்டும் அதற்கு விதி விலக்கல்ல. இதிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கல்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் உள்ளன.  

இந்த சத்துக்களும், உப்புக்களும்   உடலில் நோய்களை உருவாக்கும் நச்சுக்களை முறிக்கும் மருந்தாக  செயலாற்றுகின்றன. 

மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இட்லி.

இட்லிகள் சாப்பிடுவதால் அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கு அதிகரிக்கும். 

சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோ-பாட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கு அதிகரிக்கும். 

இட்லி என்றாலே சட்னி நினைவுக்கு வருவது போல, இனி கிட்னியும் நம் நினைவுக்கு வரட்டும். 

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. 

இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

அதனால்தான் கொஞ்சம் உடல்நிலை  சரியில்லை  என்றாலும்  இட்லியை  மட்டுமே  ஆகாரமாக மருத்துவர்கள்  எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

இட்லி  ஒரு  இந்தியன் கேக்..! 

கிள்ளியூர் - எழில் - சென்னை.