திராவிட கர்ஜனையின் நூற்றாண்டு????️????இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கடந்த ஆண்டு சட்டமன்றப் பேரவையில் குரல் எழுப்பினேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நேரிலும் வலியுறுத்தினேன்.
அந்த அடிப்படையில், இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு தொடங்கவுள்ள நிலையில், மாண்புமிகு *தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள்*, இசைமுரசு அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக, நாகப்பட்டினம் நாகூர் நகரில் அமைந்துள்ள தைக்கால் தெருவிற்கு *"இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா தெரு"* என்றும், நாகூர் சில்லடி கடற்கரையில் புதிதாக அமைய உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு *"இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா"* என்றும் பெயர் சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளார்.
எமது கோரிக்கையை ஏற்று, இசைமுரசு அவர்களுக்கு சிறப்பு செய்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி!
*#AloorShanavas MLA*
????
*வண்ணப்பலகை*
(18, டிசம்பர், 2024)
????????????????????????????????????????????????