Vannappalagai 24X7
அறிவே ஆற்றல் -2025 திராவிட விருது
Friday, 03 Jan 2025 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

புத்தாண்டு 01-01-2025 அன்று
 மாலை 6- அளவில்.... 

PPT EXPREES & POPULAR EXPREES
வாட்ஸ் அப் தள நட்புகளின் சங்கம நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதில் மொத்தம் 117- ஆளுமைகள் & பொது நிறுவனங்கள் சிறப்பு விருதுகள் அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.  

கவிஞர் நிஷா மன்சூர் & உளவியல் நிபுணர் நிஜாம் யூனுஸ் என இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் உரையாற்றி இந்த நிகழ்ச்சியை உத்வேகப்படுத்தினர். 

தமீம் டாக்டர், அக்பர்  டாக்டர், கரஸ்பான்டன்ட் கஜானபர் அலி, சீறா அஷ்ரப் பாய், சீமாட்டி ஜீயாவுத்தீன் பாய் உட்பட உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.  

உள்ளூர் ஊடக நாயகன் பாப்புலர் அபு பாய் தலைமையில், பள்ளபட்டி நகருக்கு வாட்ஸ்அப் செயலியை மக்கள் மயப்படுத்திய நமது PPT EXPREES தள அட்மின் ஆசிக் அலியின் ஒத்துழைப்புடன் வண்ணப்பலகை அஸ்கர் அலி, சேலம் சலாவுத்தீன் பாய், குருணை குளத்துப்பட்டி முஜீ பாய், பேலியோ ஷாஜஹான், மீம்ஸ் மேக்கர் சின்ன வாழை உட்பட ஒரு குழுவாக செயல்பட்டு இந்த சீர்மிகு விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினோம்.  

மஞ்சவள்ளி யூனூஸ் பாய், சாலையூத்து சாகுல் ஹமீது, கரூர் டோனி & கெய் பள்ளபட்டி லயன்ஸ், பசுமை பள்ளபட்டி உட்பட சில தனி நபர் & அமைப்புகளின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி பள்ளபட்டி *பிக்பாஸ்* அரங்கில், அரங்கத்தின் உடமையாளர் சின்னாரத்து உபைது மாமு அவர்களின் நல் ஆசியுடன் இந் நிகழ்ச்சியை அரங்கேற்றி மகிழ்ந்தோம்.   

மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பரபரப்பான விழாவில்
*திராவிட ஆய்வாளர்* என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டேன்.  

கடந்த 10- ஆண்டுகளில், திராவிட கட்டிடக் கலை ஆய்வாளர்-கோம்பை அன்வர், மைய நீரோட்ட ஆளுமை- ஆளூர் ஷாநவாஸ் MLA, கரூர் ஜோதிமணி MP, அறிவுலக விவாத முன்னோடி நீயா? நானா? ஆண்டனி, வளர்தொழில் ஜெய கிருஷ்ணன், துப்பறியும் நாவலாசியர் -ஆர்னிகா நாசர், சமுதாயத் தொண்டன், அச. உமர் பாரூக், கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி, அருட் தந்தை சுதாகர் பிலிப்ஸ், இயற்கை வேளாண்மை- சரோஜாக் குமார், நேற்றைய தினம் வந்திருந்த கவிஞர் நிஷா மன்சூர் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளை இந்த ஊரில் அறிமுகம் செய்து- மேடையேற்றி மகிழ்ந்த பொழுதெல்லாம், அதனை ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்ட எனதருமை நட்புகளுக்கும், பள்ளபட்டி நகர உறவின் முறை சொந்தங்களுக்கும், உள்ளூர் பொது நிறுவனங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி !  

வண்ணப்பலகை
( 03, ஜனவரி, 2025 ) 
"அறிவே ஆற்றல் ஆண்டு"