1001060931

பொங்கிடும் இன்பம்

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள்

*பூ பூக்கும் மாதம்.....*
????????‍♂மஞ்சள் நிற ஆவரம்பூக்கள்.
வைலட் நிற டிசம்பர் பூக்கள். 
படர்ந்த கொடிகளில் பூக்கும் பூசணிப் பூக்கள். மரங்களில் கொப்பாக பூத்திருக்கும் சிகப்பும் மஞ்சளுமான கொன்றைப் பூக்கள். இப்படி இந்த மார்கழிப் பனியில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பார்க்கும் போது மனதினில் பொங்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இந்த மட்டற்ற மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் ஊசி முனைக் குளிரும், அதன் சிலிர்ப்பும் இயற்கை  நமக்குத் தந்த வரங்கள். 

குறிப்பாக, கடக ரேகைக்கும், பூமத்திய ரேகைக்கும் நடுவில் அமைந்திருக்கும் மிதவெட்ப நாடுகளில் தமிழ்நாடும் ஒன்று. பல்லுயிர் பெருக்கம் கொண்ட இந்த பூமிக்கு உயிர் சத்துக்கள் அதிகம். மண்ணில் மறைந்திருக்கும் இந்த அத்தனை உயிர் சத்துக்களும் மரங்களாகவும், செடிகளாகவும், கொடிகளாகவும், பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும், நவதானியங்களாகவும்  அவதாரமெடுத்து நமக்கொரு காட்சியின்பத்தை தருகின்ற மாதம் தான் இந்த "ஜில்"லென்ற ஜனவரி மாதம். 

இதற்கெல்லாம் மேலாக, நமக்கான பல்வேறு உணவுவகைகளை உற்பத்தி செய்யக் கூடிய உழவர்களின் உவகை மாதமான தை பிறக்கும் மாதமும் இந்த ஜனவரி மாதம் தான். 

இந்தியக்  குடியாட்சிக்கான அரசியல்  நிர்ணய சபையை உருவாக்கி அதற்கு ஒரு முழு வடிவம் தந்து அதனை அரியணை ஏற்றி அழகு பார்த்த இந்தியாவின் குடியரசு நாள் வருவதும் இதே ஜனவரியில் தான்.

அவ்வளவு ஏன் நண்பர்களே ! 

வாசிப்பை நேசிக்கும் புத்தகக் காதலர்களின் "சென்னை புத்தக காட்சிசாலை"- தேடி வரும் மாதமும் இதே ஜனவரி மாதம் தான். 

இப்படி அடுக்கடுக்காக பூத்துக் குலுங்கும் இந்த பூ பூக்கும் மாதத்தை, 
புத்தாண்டின் முதல் மாதத்தை புன்னகையுடன் வரவேற்போம் ! 

"இனிய பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" 

✍???? 
*வண்ணப்பலகை* 
மின்னிதழ். 

*ஜீப்ரா மீடியாஸ்* 
பள்ளபட்டி ( கரூர் )

????‍♂️????????‍♂️????????‍♂️????????‍♂️????????‍♂️????????‍♂️


Comment As:

Comment (0)