
டிக்கெட்டெல்லாம் எடுக்க வேண்டாம்.!
நிழல் நிஜமாகிறது
- By --
- Sunday, 05 Jan, 2025
கோவை: தொழில் நகரான கோவையில் திரைப்பட தொழில் வணிகம் கோலோச்சி வந்த நிலை மாறி கால ஓட்டத்தில் நூற்றாண்டு, பொன் விழா கண்ட திரையரங்குகள் அண்மைக் காலங்களில் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னையைத் தாண்டி சேலத்தில் 1935-ல் டி.ஆர்.சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவைத் தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக 1937-ல் ரங்கசாமி நாயுடு, ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார், இயக்குநர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரின் முயற்சியில் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. தொடர்ந்து 1946-ல் புலியகுளத்தில் பட்சிராஜா ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய இருவரின் திரை வாழ்க்கையில் சென்ட்ரல் ஸ்டுடியோ, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகியவை முக்கியப் பங்கு வகித்தன.
திரைப்படத் துறையில் முக்கியப் பங்களித்த கோவையில் தென்னிந்தி யாவிலேயே முதல் முறையாக 1914-ம் ஆண்டு டிலைட் திரையரங்கு கட்டப் பட்டது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் கட்டிய நூற்றாண்டை கடந்த டிலைட் திரையரங்கு அண்மையில் வணிக வளாகம் கட்ட இடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வடகோவை மேம்பாலம் அருகில் 1957-ல் ராமசாமி நாயக்கர் என்பவரால் சென்ட்ரல் திரையரங்கு தொடங்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் இங்கு அதிகளவில் திரையிடப்பட்டன.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் கனகதாரா ஆகிய இரண்டு திரையரங்கு கள் கோவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சுமார் 1,500 பேர் வரை அமர்ந்து திரைப்படம்
வண்ணப்பலகை டீம்
(05, ஜனவரி, 2025)