1000970276

பொன்னான வாக்குகளை.... ..

ஓட்டுரிமையை உருவாக்கிய அம்பேத்கார்

????சுதந்திரம், 
????சமத்துவம், 
????சகோதரத்துவம் 
இந்த மூன்று கூறுகளும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சிறப்பு அம்சங்கள். இந்த சிறப்பு அம்சங்களின் அடிப்படையிலேயே, தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உருவாக்கப்பட்டது. அன்றைய வலதுசாரி அரசியல் தலைவர்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி, டாக்டர் அம்பேத்கார் "ஒருவருக்கு ஒரு ஓட்டு"- என்ற சட்டத்தை இந்திய நாடாளு மன்றத்தில் இயற்றினார். இதனால், உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தல் நடைமுறை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்தது.

அதுவரையிலும், பட்டதாரிகள், நிலச் சுவான்தார்கள், வரி செலுத்தும் வணிகர்கள் மட்டுமே பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமைகளை பெற்றிருந்தார்கள். இதனால் ஆட்சியாளர்களை தேர்த்தெடுக்கும் உரிமைகள் சமூகத்தின் மேல் தட்டில் உள்ளவர்களுக்கும், படித்தவர்களுக்கும் மட்டுமே இருந்தது. இந்த வரையறுக்கப்பட்ட நிலை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது.

அதற்க்கு ஏற்றபடி இந்திய தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு ஒரு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார்.  
அந்த ஆணையத்திற்கு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அத்தனை கட்டமைப்புகளையும் உருவாக்க அதிகாரம் வழங்கப்பட்டது. அதன் படி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, தொகுதி வரையறை, வேட்பு மனு பெறுதல் & பரிசீலனை செய்தல், உரிய தேதியில் தேர்தலை பாதுகாப்பாக நடத்துதல், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவித்தல் என பல கட்ட அதிகாரங்களும் புதிதாக உருவாக்கப்பட்டு ஆணையத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.  

அதன் படி இந்திய நாடாளுமன்றத்தின் முதல் பொதுத் தேர்தல் 1951- ஆம் ஆண்டில் தொடங்கி 1952- மே மாதம் வரை ஆறு மாதங்களாக நாடெங்கும் நடத்தப்பட்டது.  

வறுமையும் அறியாமையும் நிரம்பி வழியும் இந்திய மக்களிடையே தேர்தல் என்பது ஒரு கேலிக் கூத்தானது என மேலை நாட்டு ஊடகங்கள் பரிகாசம் செய்து எழுதின. இதை எல்லாம் மீறியே, அன்றைய நாளின்  
"மிஸ்டர் பொதுஜனம்" இந்த முதல் தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். இந்த ஜனநாயக நடைமுறைகளையே அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பினார்.  

ரஷ்யாவில் ஏற்ப்பட்ட மக்கள் புரட்சிக்கும், சீனாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கும் பிறகு அங்கு மக்கள் ஜனநாயகம் மலரவில்லை. ஆனால், பல கட்ட விடுதலைப் போராட்டத்திற்கு பிறகு சுதந்திரம் பெற்ற இந்தியாவில் மக்கள் ஜனநாயகம் மலர்ந்தது. இதற்கு அன்றைய பிரதமர் நேரு அவர்களும் அவருடைய அமைச்சரவை சகாக்களுமே காரணம். 

அதிலும் குறிப்பாக, பெயரளவுக்கு ஜனநாயகத் தன்மை கொண்ட அதிபர் ஆட்சி முறைக்கு ஏற்ற சூழல் நிலவிய போதும், அதனை சிறிதும் விரும்பாத நேரு அவர்கள் மக்கள் ஜனநாயகத் தேர்தல் முறையை அறிமுகப் படுத்தி, இந்தியாவை ஒரு முழுமையான ஜனநாயக நாடாக அறிவித்தார்.

அதற்கு அன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும், அமைச்சரவையும் முழுமையான ஒத்துழைப்பை நல்கியது.   

"ஒருவருக்கு ஒரு ஓட்டு"- என்ற புரட்சிகரமான சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்காரின் 69- வது நினைவு தினத்தில் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்திடுவோம் !  

( மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திரு இனாமுல் ஹசன் - அகில இந்திய காங்கிரஸ் பேரியக்க தொண்டன் - புதுச்சேரி ) 

ஜெய் பீம் !* 
ஜெய் ஹிந்த் !!* 

???? 

@வண்ணப்பலகை 
  (06, டிசம்பர், 2024) 

????️????????️????????️????????️????????️????????️


Comment As:

Comment (0)