
வெற்றிக்கும்- தோல்விக்கும் மிக அருகில்....
டிரம்ப் வெற்றி- நடந்தது என்ன ?
- By --
- Thursday, 07 Nov, 2024
இது அமெரிக்காவின் பொற்காலம் என புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் பெருமிதம். அவர் தனது குடியரசு கட்சியின் சகாக்களுடன் ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து தனது முதல் அறிக்கையை வெளியிட்டார்.
.
துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேம்ஸ் டேவிட் வான்சுக்கு வாழ்த்தும்,
தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரப தொழிலதிபர் எலான் மாஸ்க்ருக்கு நன்றியும் தெரிவித்தார்
புதிதாக அமைய இருக்கும் தன்னுடைய அரசு அமெரிக்க மக்களின் வரிச் சுமைகளை குறைக்கும். எல்லைகளை வலிமைப்படுத்தும். ராணுவத்தை பலப்படுத்தும். ஜனநாயகத்தை பாதுகாக்கும் - என்ற உறுதிமொழிகளை தன்னுடைய முதல் அறிக்கையாக டிரம்ப் வெளியிட்டார்
அமெரிக்க தேசத்திற்கு நல்லாட்சி தருவதற்காகவே, தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் மீது கொடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருந்து இறைவன் தன்னை காப்பாற்றியதாக டிரம்ப் பெருமிதத்துடன் கூறினார்
அடிப்படையில் இவர் ஒரு பிரபல தொழில் அதிபர் என்பதால், அமெரிக்காவின் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகளில் சற்று கரராக இருக்கலாம் என சர்வதேச தொழில்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன குறிப்பாக அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகப்படுத்தி உள்ளன. இது போன்று இறக்குமதி வரிகளை அதிகப்படுத்திய நாடுகளின் மீது சிறிய அளவிலான பொருளாதார தடைகளை புதிய ட்ரம்ப் அரசு கொண்டுவரும் என அஞ்சப்படுகிறது
அத்தோடு விட்டதா என்ன...?
உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேலை வாய்ப்புக்காக அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்களால் பூர்வகுடி அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பரிபோகின்றன. இதனை காரணம் காட்டி எச் 1 பி என்ற வெளிநாட்டு விசாக்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும். இதனால் வேலை தேடிச் செல்லும் இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். போலவே, அமெரிக்க குடியுரிமை சட்டத்திலும் நிறைய திருத்தங்கள் கொண்டுவர இருப்பதால, கிரீன் கார்டு அனுமதி கேட்டு பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் கோரிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படும். இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும் உளைச்சலை உருவாக்கும்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்க தேசத்தில் உள்நாட்டவர் வெளிநாட்டவர் என்ற பேதங்கள் வேகமாக தலையெடுத்து வருகின்றன. அதன் பிரதிநிதியாகவே ரெனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்துள்ளார் - என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது போன்ற வலதுசாரி அரசியல் கருத்தியல்கள் வெற்றி பெறுவது குறித்தும் மிகுந்த அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
அதேவேளையில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை அதிபர் கமலஹாரிஸ் அனைத்து தரப்பு மக்களுக்குமான பிரதிநிதியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் பெரும்பாலான அமெரிக்க மக்களும் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளார்கள். அதன் பிரதிபலிப்பு அப்படியே தேர்தல் களத்தில் எதிரொலித்துள்ளது. மொத்தம் 270 எலக்டோரல் வாக்குகள் பெற வேண்டிய நிலையில், வெற்றி வாய்ப்பை இழந்த கமலா ஹாரீஸ் 241 எலக்டோரல் வாக்குகள் பெற்றதை அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கையாக நாம் பார்க்கலாம். இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப்பை கடும் போட்டிக்கு இடையில் தான் வெற்றி பெற அனுமதித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே 300 வாக்குகளுக்கு மேல் செல்ல வேண்டிய டிரம்ப்பின் செல்வாக்கை 297 வாக்குகளோடு தடுத்து நிறுத்தி உள்ளார். எனவே, டிரம்ப்பின் வெற்றி என்பது தோல்விக்கு மிக அருகில் கிடைத்த வெற்றி. கமலா ஹாரீஸின் தோல்வி வெற்றிக்கு மிக அருகில் நிகழ்ந்த தோல்வி.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான சேதி என்னவெனில், கடந்த முறை நடந்த 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் என்ற பெண்மணியை தோற்கடித்து அதிபரானார். இந்த முறை நடந்த 2024 தேர்தலில் கமலா ஹாரீஸ் என்ற இந்திய வம்சாவளிப் பெண்மணியை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால்... 2020- ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் என்ற ஆண் மகனிடம் தோற்றுப் போனார்.
ஆதலினால்.... டிரம்ப்பின் இந்த வெற்றி அமெரிக்க சமூகத்தின் ஆணாதிக்க உளவியலுக்கு கிடைத்த வெற்றியாகவே எனக்குப் படுகிறது.
உங்களுக்கு.....?
ஷரீப். அஸ்கர் அலி
( 07, நவம்பர், 2024).