
எலும்புகள் இரும்புகள் ஆகட்டும்.
- By --
- Thursday, 12 Dec, 2024
1) நமது உடல் எடையில் எலும்பின் எடை அளவு 60%.
2) எலும்புகள் நம்மை நிமிர்ந்து நடக்கச் செய்கிறது. அதே வேளையில், நமது உள் உறுப்புகளை ஒரு கேடயம் போல் பாதுகாக்கிறது.
3) எலும்பில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நமது உடல் உறுப்புகளை இயக்க உதவுகின்றன.
4) கேழ்வரகு, முருங்கைக்கீரை பிளஸ் கீரைகள், முட்டை, மாமிசம் இவைகளில் எல்லாம் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.
5) நாம் சாப்பிட்ட உணவில் உள்ள கால்சியம் சத்துக்களை வயிற்றில் இருந்து எலும்பிற்கு எடுத்துச் செல்ல விட்டமின் D சத்துக்கள் ஒரு வாகனமாக செயல்படுகிறது.
6) வைட்டமின் D சத்துக்கள் சூரிய ஒளியில் மிகையாகக் கிடைக்கிறது. இதற்கான வாய்ப்பு குறைவானவர்கள் விட்டமின் D சத்துக்களை மாத்திரை வடிவில் உட் கொள்கின்றனர்.
7) விட்டமின் D -யின் தேவை நபருக்கு நபர் வேறுபடும். எனவே அதற்கான மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்.
8) 30 வயதிற்கு மேல் கால்சியம் சத்துக்களை உறிஞ்சும் திறன் நமக்கு குறைய ஆரம்பித்து விடுகிறது. எனவே முப்பது வயதிற்கு முன்பாகவே கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.
9) தினமும் 21 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் உணவில் இருந்து கிடைத்த கால்சியம் சத்துக்கள் எலும்புகளை நோக்கி சென்று விடும். அதே வேளையில், உடற்பயிற்சி செய்யாதவர்களின் அல்லது உடல் உழைப்பு இல்லாதவர்களின் கால்சியம் சத்துக்கள் வெறும் கழிவாக மாறி வெளியேறி விடுகின்றன.
10) இதனால், உடற்பயிற்சியும் உடல் உழைப்பும் இல்லாத இள வயதுக்காரர்களின் எலும்புகள் தங்கள் வலிமையை இழந்து விடுகின்றன.
11) புகை, மது, போதைப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்கள் எலும்புக்கு செல்ல வேண்டிய கால்சியம் சத்துக்களை வழியிலேயே திருடி கொள்கின்றன.
12) ஹார்மோன்கள் சமநிலை இல்லாதபோது எலும்புகள் தங்களின் வலிமையை இழந்து விடுகின்றன.
13) பெண்களுக்கு "மெனோபஸ்" ஏற்படும்போது இஸ்ட்ரோஜன் அளவு குறைந்து எலும்பின் அடர்த்தி குறைந்து விடுகிறது.
14) பெண்களுக்கு ஏற்படும் இது போன்ற எலும்பு அடர்த்தி குறைவுகளுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.
15) எலும்புகள் வலிமையாக இருந்தால் தான் முதுமை காலத்தில் ஏற்படும் திடீர் எலும்பு முறிவுகளை நம்மால் தடுக்க முடியும்.
16) சத்தான உணவுகளை சாப்பிடுதல் குப்பை உணவு தவிர்த்தல் குளிர்பானங்களை தவிர்த்தல் புகை மது போதை வஸ்துக்களை முற்றிலும் தவிர்த்தல் உடல் எடையை பருவனாகி விடாமல் கட்டுக்குள் வைத்திருத்தல் இவற்றை கடைபிடித்து வந்தாலே போதும் எலும்புகள் இரும்புகள் போல வலிமையாக மாறிவிடும்.
Dr, அரவிந்த் - எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்.
நன்றி: அந்திமழை - மாத இதழ். -டிச-24