1000927699

சொல்லி அடித்த கில்லி

தமிழச்சியின் உலக சாதனை

அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலகக் கோப்பை கேரம்போர்டு சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாட்டு வீராங்கனை மகுடம் சூடினார்

இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய நான்கு வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் 17 வயது காசிமா மூன்று பதக்கங்களை வென்றார். மகளிர் தனிப்பிரிவு. இரட்டைர் பிரிவு  குழு பிரிவு - என மூன்று பிரிவுகளிலும் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
நவம்பர் 21ம் தேதி  வீராங்கனைகள் தமிழகம் திரும்புகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்ற வீராங்கனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த எளிய மக்களின் வெற்றி திராவிட மாடலின் வெற்றி என்று புகழாரம் சூட்டினார்.

ஜூலை மாதம் இந்த வீராங்கனைகளின் பயிற்சிக்காகவும் பயணத்திற்காகவும் கடந்த ஜூலை மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு விளையாட்டு துறையின் சார்பில் இந்த வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். 

கிள்ளியூர் எழில்- சென்னை 


Comment As:

Comment (0)