1000980419

பூங்காக்கள் பராக்..பராக்

ஹைடெக் சிட்டியாகும் கோவை.

சென்னை ராமானுஜம் ஐடி டெக் சிட்டி போல, கோவையிலும் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்த ஐடி டெக் சிட்டி அமைந்தால் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 

தொழில் நகரமான கோவை மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.

பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து ஐடி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

கோவையில் தகவல் தொழில்நுட்ப தொழில் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 

எல்காட் சார்பில் கலைஞர் ஆட்சி நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு, சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ் பீளமேட்டில் 17 லட்சம் சதுர அடியில் "டைடல் பார்க்" அமைக்கப்பட்டது.

இதேபோல, விளாங்குறிச்சியில் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 114 கோடி மதிப்பில் கோவையில் அரசின் எல்காட் அமைப்பில் 78 ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு தனியார் ஐடி பூங்காக்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.

இந்த டெக் பார்க்குகள் மூலமாக அரசு மற்றும் தனியார் ஐ.டி. நிறுவனங்கள் மூலம் சுமார் 48 ஆயிரம் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் நேரடியாகவும், சுமார் 1 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமனுஜம் ஐடி டெக் சிட்டி போல, கோவை மாவட்டத்திலும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து டெக் சிட்டி அமைக்கப்படும். 
இதன் பரப்பளவு 30 லட்சம் சதுரடி. 

இந்த வளாகத்தின் மூலம் சுமார் 36 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த தகவல் தொழில்நுட்ப நகரம் அமைவது கோவை மாவட்டத்தை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும். 

இந்த திட்டம் கோவை சிட்டியின் வளர்ச்சியில் மைல்கல்லாக இருக்கும்.  

கோவையில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான நிலம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது

இந்த டெக் சிட்டி மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், அந்த இடம் பல்கலைக்ககத்துக்கு தேவைப்படும் என்று அதன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால், வேறு இடத்தில் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் மற்ற பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

அமுதன் இஸ்மாயில் - கோவை


Comment As:

Comment (0)