1000918384

கோட்டையைப் பிடித்த கோடுகள்

தமிழ்நாட்டின் டாவின்சி: மருது

உரியவர்களைத் தேர்ந்து எடுத்து பொறுப்புகளைத் தருவது என்பது கலைஞருக்கு கைவந்த கலை. அதே வழியில் மாண்புமிகு. முதல்வர், ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக, ஓவியர் திரு. ட்ராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ஓவியம், வரைகலை, திரைப்படத் துறையில் புதிய கணினி தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி. புதுமையான ஓவியங்களை வரைந்து வியக்க வைத்தவர். இவர் வரைந்த பெரியார் ஓவியங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை. தான் கற்றுக் கொண்ட நுட்பங்களை எந்த தயக்கமும் இல்லாமல் மற்றவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்க கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் உள்ளவர். சமூகநீதி சிந்தனையாளர். மிகச் சரியான தேர்வு. நண்பர் திரு. மருது அவர்களுக்கு அன்பான பாராட்டுகள். 

ஜெய கிருஷ்ணன் - வளர் தொழில். 


Comment As:

Comment (0)