
தடுப்புக் கருவிகள் இல்லலை.
திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து
- By --
- Friday, 13 Dec, 2024
திண்டுக்கல் நகரில் திடீர் தீ விபத்து.
திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிட்டி ஹாஸ்பிடல் என்ற நான்கு அடுக்கு கொண்ட எலும்பு முறிவு மருத்துவமனை உள்ளது.
நேற்று (டிசம்பர் 12ஆம் தேதி) இரவு 9 மணி அளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் 30 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டது.
கட்டிடத்தின் கீழ் தளத்தில் பிடித்த தீ மூன்று மாடிகளுக்கும் வேகவேகமாக பரவியது.
தகவல் அறிந்த பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கி உள்புற நோயாளிகளையும், வெளி நோயாளிகளையும், நோயாளிகளை காணவந்த உறவினர்களையும் பெரும் தீ விபத்தில் இருந்து வேக,வேகமாக வெளியேற்றி காப்பாற்றினார்கள்.
அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பிற மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டார்கள்.
20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகள் உயிர்காக்கும் சேவையில் ஈடுபட்டதால், திருச்சி - திண்டுக்கல் விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட உடனே மருத்துவமனையின் மின்சார வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மேல்மாடிக்கு சென்று கொண்டிருந்த லிப்ட் பாதி வழியில் சிக்கிக் கொண்டது. சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகே லிப்டில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினார்கள்.
தகவல் அறிந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் அவருடன் பேரிடர் மேலாண்மை இயக்குனர் விசாகன் உடன் வந்திருந்தார்.
அமைச்சர் ஐ செந்தில்குமார் அமைச்சர் சக்கரபாணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 30க்கும் மேற்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து தீ விபத்துக்கான காரணத்தை ஆராய நிபுணர் குழு சிட்டி மருத்துவமனைக்கு உடல்நிலையாக விரைந்து வந்தனர்.
அவர்கள் நடத்திய முதல் கட்ட ஆய்வில் மருத்துவமனையில் தீ விபத்துகளை தடுக்கக்கூடிய புதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது
குறிப்பாக தீ விபத்து ஏற்பட்ட உடன் உடனடியாக அடிக்க வேண்டிய அவசர கால "அலாரம்" வசதிகள் அங்கு காணப்படவில்லை. இதுவே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மருத்துவமனையின் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
வதிலை எக்ஸ்பிரஸ் - செய்தியாளர்