1000920949

உயிர் காக்கும் முடிவுகள்.

ஊடகங்களுக்கும் பொறுப்பு உண்டு !

கடினமான மருத்துவ முடிவுகளை பரபரப்பான செய்திகளாக மாற்ற வேண்டாம். 

இன்றைய அச்சு மற்றும் மின் அச்சு ஊடகங்களுக்கும், யூடியூபர்களுக்கும் 
Dr எழில் நாகநாதன் MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

புற்று நோய் சிகிச்சை போன்ற உயிர் காக்கும் சிகிச்சையின் போது நோயாளியின் நலன் கருதி சற்று "ரிஸ்க்"-கான மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். அப்படியான மருந்துகள் பல நேரங்களில் சரியான தீர்வாக அமைந்து விடும். சில நேரங்களில் இது போல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். 

இவை எல்லாம் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதி தான் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, இதனை சிகிச்சை குறைபாடாக பார்க்கத் தேவையில்லை. காரணம், இது நோயாளியின் நலன் கருதி மருத்துவர்கள் எடுக்கும் கடினமான மருத்துவ முடிவுகள். இந்த முடிவெடுக்கும் சுதந்திரம் இருந்தால் தான் மருத்துவர்களால் எந்த ஒரு உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கும் முழு மனதுடன் சிகிச்சை அளிக்க முடியும்.  

எனவே, இது போன்ற உயிர் காக்கும் கடினமான முடிவுகளின் மீது பொது வெளியில் வைத்து கேள்விகள் எழுப்புவதை அனைத்து வகையான ஊடகங்களும் தவிர்த்துக் கொள்ளவது நல்லது.  இதனை பரபரப்பான செய்திகளாக மட்டுமே மாற்றுவதால் நமக்கு எந்த ஒரு தீர்வும் கண்டிப்பாக கிடைக்காது. 

ஜீப்ரா மீடியா - சென்னை 


Comment As:

Comment (0)