
ஒரே நாளில்
அதிபர் தேர்தல் எதிரொலி....
- By --
- Monday, 04 Nov, 2024
ஒரே நாளில் 10 லட்சம் கோடி இழப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி.
நவம்பர் 05- ஆம் தேதி நாளை நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும்? என்ற மில்லியன் டாலர் கேள்வியால், அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை ஒரே நாளில் திரும்ப பெற்றுக் கொண்டார்கள். இதனால், இந்திய பங்குச் சந்தையில் சென்சக்ஸ் 1,400 புள்ளிகள் குறைந்து 78,000 புள்ளிகளில் நின்றது. அதே போன்று தேசிய பங்குச் சந்தையில் நிப்ஃடீ 454 புள்ளிகள் குறைந்து 23,850 புள்ளியில் நின்றது.
இதனால், ஒரே நாளில் 10 லட்சத்து 44 ஆயிரம் கோடி பங்கு சந்தையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் இன் அரசியல் நிலைப்பாடு தற்போதைய பா.ஜ.க அரசுக்கு சாதகமாகவும், கமலா ஹரீஸின் அரசியல் நிலைப்பாடு பொதுவானதாகவும் இருக்கும் என்ற எதிர் பார்ப்பின் அடிப்படையில்....
பங்கு வர்த்தகம் உட்பட இந்திய - அமெரிக்க நாடுகளின் பல்வேறு வர்த்தக உறவுகளும் மதில் மேல் பூனையாக நிற்கின்றன.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக கட்டமைப்புகளை கொண்ட இந்தியாவும், அமெரிக்காவும் சரியான பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.
விருப்பங்கள் நிறைவேற விடியும் வரை காத்திருப்போம் !
ஷரீப். அஸ்கர் அலி// 04, நவம்பர், 2024