
அரசு போக்குவரத்தில் சாதனை
- By --
- Monday, 04 Nov, 2024
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாதனை படைத்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளில் நேற்று (நவம்பர் 3) மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். ஒருநாளில் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையில் இதுவே அதிகம்.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 31 அன்று கொண்டாடப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பணியாற்றி வந்தவர்கள், மாணவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். நேற்றுடன் 4 நாட்கள் விடுமுறை முடிவடைந்த நிலையில், பணியிடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
சென்னையில் 2.1 லட்சம் கிலோ பட்டாசு குப்பை! தூய்மை பணியாளர்களால் மீண்டும் உயிர்த்தெழுந்தது மாநகரம்
"சென்னையில் 2.1 லட்சம் கிலோ பட்டாசு குப்பை! தூய்மை பணியாளர்களால் மீண்டும் உயிர்த்தெழுந்தது மாநகரம் "
சிறப்பு பேருந்துகள்: தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின்பும் பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விரைவு மற்றும் சிறப்புப் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில், பல லட்சக்கணக்கானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருந்தனர்.
அதிகமானோர் முன்பதிவு: இந்நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை முதலே திரும்பத் தொடங்கியதால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடங்கியிருந்த நிலையில், மொத்தமாக சுமார் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்திருந்தனர். முன்பதிவு செய்யாமல் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக வழக்கமாக சென்னைக்கு வார இறுதி நாட்களில் தேவையான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அதனைக்காட்டிலும் 2,561 சிறப்பு பேருந்துகள், 3,912 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சேலம், பெரம்பலூர் பேருந்து நிலையங்களில், பயணிகளின் வசதிக்கேற்ப பேருந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு புறப்படும் முன்பு
"தீபாவளிக்கு சொந்த ஊருக்கு புறப்படும் முன்பு "இதை" கண்டிப்பா மறக்காதீங்க.. இல்லைனா பிரச்சனையாகிடும்"
இந்நிலையில், நேற்று மட்டும், அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு புதிய சாதனை: இதுதொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தில், தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காகவும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் நேற்றைய தினம் (நவம்பர் 3) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, பிற இடங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு வழக்கமாக இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது
மேலும், 03.11.2024 அன்று மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் நெரிசல்.. சென்னை கிளாம்பாக்கத்தில் தவித்த பயணிகள்! பெருங்களத்தூர், வண்டலூரில் ஊர்ந்த வாகனங்கள்
கடும் நெரிசல்.. சென்னை கிளாம்பாக்கத்தில் தவித்த பயணிகள்! பெருங்களத்தூர், வண்டலூரில் ஊர்ந்த வாகனங்கள்