1000939909

யார் சொன்னது ?

இந்தி திரைப் படங்களுக்கு எதிர்ப்பு !..?

தமிழ் நாட்டில் இந்திப் படங்களைப் பற்றி பேசுவது பெருங் குற்றம். 
@செந்தூரம் ஜெகதீஷ் ,- குற்றச்சாட்டு 

குற்றம் என்று யார் சொன்னார்கள் ? எத்தனையோ படங்கள் இங்கே வெள்ளி விழா கண்டுள்ளன. குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சி அரங்கேறிய 1967- 76 காலக் கட்டத்தில் இங்கே இந்திப் படங்கள் தமிழ் படங்களுக்கு இணையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆராதனா தொடங்கி... பாபி, யாதோங்கி பாரத், நாகின், ஷோலே, குர்பானி, ஏக் துஜே கேளீயே, ஹீரோ, கியாமத் ஸே கயாமத் டக், இப்படி வருடக் கணக்கில் ஓடிய இந்திப் படங்களின் பட்டியல் மிகப் பெரியது.

கலைஞரின் திராவிட ஆட்சிக்குப் பிறகு வந்த எம்.ஜி.ஆரின் அண்ணாயிஸம்(!) ஆட்சியில் தான், அதுவும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்தி திரைப்படங்களை திரையிட ஒரு சில கட்டுப்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன. தமிழ் நாட்டு மக்களும் சரி, திராவிட ஆட்சியாளர்களும் சரி வட இந்தியர்களைப் போல மொழி சார்ந்த பாகுபாடு பார்த்ததில்லை. விருது வாங்க வட இந்தியா செல்லும் தமிழ் மற்றும் தென்னிந்திய நடிகர்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்ததில்லை. இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண். மேலதிக விபரங்களுக்கு நம்ம புனைகதை அதி மேதாவி ஜெயமோகனிடம் கேளுங்கள். 

@வண்ணப்பலகை 
(05, டிசம்பர், 2024)


Comment As:

Comment (0)