1000902766

ஏர் ஹோஸ்டஸ்ட்

ஏர் ஹோஸ்ட்டஸ்ட்- டிடம் கேட்கக் கூடாதது...

"ஏர் ஹோஸ்ட்"- பணிப் பெண்களிடம் கேட்கக் கூடாதது என்ன ? 

"உயரமான"- விமானப் பயணங்களின் போது, பயணிகளை உரிய இருக்கைகளில் அமர வைப்பது. தேவையான சிற்றுண்டி மற்றும் பானங்களை கொண்டு வந்து தருவது. நீண்ட இரவுப் பயணங்களின் போது "கத,கத"-ப் பான போர்வைகளை  ஏற்பாடு செய்து தருவது - என பயணிகளின் தேவைகளை உடனுக்குடன் பரிவுடன் பூர்த்தி செய்வது அவர்களின் அன்றாட வேலை.  

இத்தனையும் செய்கிறார்களே ! பணிப் பெண்கள் தானே ! என நினைத்து "பட்"- என நாம் கேட்டு விடக்கூடாது. அப்படிக் கேட்டாலும் அவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். 

ஆம் நண்பர்களே ! நாம் கையோடு எடுத்துச் சென்ற சூட்கேஸ் பெட்டிகள் எத்தனை பெரியதாகவும், பளுவானதாகவும் இருந்தாலும் கூட, நம் இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் கேரியரில் நாமேதான் மேலே தூக்கி வைக்க வேண்டும். நம்முடைய லக்கேஜ்களை பணிப் பெண்கள் கையாள மாட்டார்கள். அப்படி, நாமே சுயமாக கையாள முடியாத லக்கேஜ்களை அதற்குரிய சாமான் பெட்டகத்தில் ஒப்படைத்து விட வேண்டும். அப்படி ஒப்படைத்து விட்டு கையளவு பெட்டியோடு பயணிப்பதே சிறந்தது.   

என்ன நண்பர்களே! 
சொன்னது புரிந்ததா...?  

பு...ஸ்....ஸ்...ஸ்...ஸ்......


Comment As:

Comment (0)