
பறக்கும் சாலை
கரூர் - கோவை எக்ஸ்பிரஸ் சாலை
- By --
- Wednesday, 25 Dec, 2024
கோவைக்கு அடித்த ஜாக்பாட்..
கரூர் - கோவை இடையே வருது எக்ஸ்பிரஸ் வே!
எதிர்பார்க்காத பிரம்மாண்ட திட்டம்
கோயம்புத்தூர் - கரூர் 4 வழிச்சாலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பல்லடம் வரை ஏற்கனவே முடியும் நிலையில் உள்ளது.
பல்லடம் முதல் வெள்ளக்கோவில் வரை கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டது. இடையே தரைவழி பாலங்கள், சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன.
வெள்ளக்கோவில் முதல் கரூர் வரை ஒரு பக்கம் பணிகள் முடிந்து உள்ளன. இன்னொரு பக்கம் பணிகள் நடந்து வருகின்றன. வாகனங்களின் அபரிமிதமான எண்ணிக்கையின் காரணமாக பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டத்தை முன்வைத்தது.
இதையடுத்து NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த திட்டம் NHAI கூட்டங்களில் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த திட்டத்தின் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன.
கரூர் மற்றும் கோவை இடையே தற்போதுள்ள நெடுஞ்சாலைக்கு இணையாக கூடுதலாக இரண்டு லேன்களை இந்த சாலை கொண்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரப்பூர்வ ஆதாரத்தின்படி, இந்த திட்டத்திற்காக மத்திய அரசு கிட்டத்தட்ட ₹400 கோடியை அனுமதித்துள்ளது. இதில், வெள்ளக்கோவில் முதல் பல்லடம் வரையிலான 47 கி.மீ., தூரத்துக்கு, 274 கோடி ரூபாய், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும்.
பல்லடம் - கோயம்புத்தூர் சாலையை நெடுஞ்சாலை துறை ஏற்கனவே பல பகுதிகளாக விரிவுபடுத்தி வருகிறது. வெள்ளக்கோவில்-பல்லடம் சாலைக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
விரைவில் கட்டுமானப் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும். கரூரில் இருந்து வெள்ளக்கோவில் வரையிலான சாலையை சுமார் ₹130 கோடியில் விரிவுபடுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமுதன் இஸ்மாயில்- கோவை