1000906546

மாவட்டங்கள் தோறும்

சீமான் கட்சியில் விரிசல்

திரைப்பட  நடிகர் சீமான் ஒருங்கிணைப்பில் உருவான நாம் தமிழர் கட்சியில் விரிசல்.

திருப்பத்தூர் (வ.ஆ) வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தேவேந்திரன் கட்சிக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இதனை கண்டித்து, அதே கட்சியின் இன்னொரு பொறுப்பாளர் தேவேந்திரனை செய்தியாளர்களிடம் பேச விடாமல் தடுத்தார்.  

அதனையும் மீறி அதிருப்தியாளர் தேவேந்திரன் தனது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றார். வேலூர் நாடாளுமன்றத்திற்கு  10 டிகிரிகள் வாங்கிய முருகன் என்பவரை பரிந்துரை செய்திருந்தேன். ஆனால், அவரை தள்ளி விட்டு வேறு புதிய முகத்தை வேட்பாளராக சீமான் அறிவித்து விட்டார். போலவே, உதய நிதிக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டதை கண்டித்த சீமான், அதே போன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளை ஓரம் கட்டி விட்டு நேற்று வந்த இளைஞர்களை பொறுப்பாளர்களாக ஆக்கியுள்ளார்.  தி.மு.க வின் மீது என்ன வகையான விமர்சனங்களை சீமான் வைக்கிறாரோ அதே தவறுகளை சீமான் தன் கட்சிக்குள் தைரியமாகவே செய்கிறார். என்னைப் போன்று ராணுவத்தில் பணியாற்றி விட்டு வந்து கட்சிக்காக உழைத்து வரும் பத்தாண்டு கால உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை இங்கில்லை என மிக அதிருப்தியாளர் தேவேந்திரன் மிகக் காட்டமாகவே பேட்டி அளித்தார். 

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் தேவேந்திரனை அடிக்கப் பாய்ந்தனர். இதனால் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கைகலப்பு சென்று முடிந்தது.  

கடந்த ஆறு மாதங்களாகவே மாவட்டங்கள் தோறும் இந்த சலசலப்பு, கை கலப்பு காட்சிகள் அரங்கேறி வருவதாக நாம் தமிழர் கட்சியின் மூத்த உறுப்பினர் மிகுந்த கவலையுடன் குறிப்பிட்டார். 

திருப்பத்தூர் நிஜாம் தீன்.


Comment As:

Comment (0)