
சென்னையில் விட்டாச்சு "லீவு"
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
- By --
- Tuesday, 12 Nov, 2024
சென்னையில் கன மழை வலுத்து வருகிறது. வடசென்னை மத்திய சென்னை தென்சென்னை சென்னையின் புறநகர் பகுதிகள் என சென்னை மகா நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் கனத்த மழை பெய்து வருகிறது. இம்மழை மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடும்படி சென்னை மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஐ க டே உத்தரவிட்டுள்ளார். ஆனால், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என கூறப்படுகிறது.
இன்று காலை பள்ளிக்கு தாமதமாக வரும் குழந்தைகளை கண்டிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பள்ளிகளுக்கு முழு நேர விடுமுறை விடுமுறை தனது மறு உத்தரவு பிறப்பித்தார். இந்த கனமழை மேலும் நான்கு நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
கிள்ளியூர் இளஞ்செழியன் - சென்னை