1000913373

ரேஷன் - பெட்ரோல்.

வடகிழக்கு மாகாணங்களில் ஒன்று திரிபுரா. இங்கு செயல்பட்டு வரும் எல்லைப் பகுதி ரயில்வேயின் சரக்கு ரயில் லும்டிங் மற்றும் பதர்பூர் இடையே தடம் புரண்டதால், "திடீர்"- எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

திரிபுரா அரசு நவம்பர் 10-ந் தேதி முதல் கடும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு சக்கர வாகனங்களுக்கு ₹200- க்கும், 4 சக்கர வாகனங்களுக்கு ₹1,000-க்கும் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும்.  எரிபொருள் கை இருப்பு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த "ரேஷன்"- கட்டுப்பாடு நீடிக்கும்.

நிரோஷா சௌத்ரி


Comment As:

Comment (0)