
உலகின் நம்பர் ஒன் !
- By --
- Monday, 04 Nov, 2024
உலகின் நம்பர் ஒன் அரிசி பிரியர்கள் யார் ?
தமிழ் நாடு மற்றும் தென் மாநில மக்கள் அரிசிச் சோறு அதிகம் சாப்பிடுவர்கள் என்பதால், இந்தியர்களாகிய நாம் தான் உலகின் நம்பர் ஒன் என நினைத்து விட வேண்டாம். இந்த அரிசி விளையாட்டில் சீனர்கள் தான் முதலிடம். உலகின் 30% நெல் விளைச்சல் சீனாவில் விளைகிறது. அத்தனையையும் அவர்களே அரிசியாக்கி சாப்பிட்டு விடுகிறார்கள். எனவே, இந்தியர்களாகிய நமக்கு இரண்டாம் இடம் தான். மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா, நான்காவது இடத்தில் வங்கதேசம், அதற்கு அடுத்து வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து என வருகிறது. இப்படியாகவே, தென் கிழக்காசிய நாடுகள் முழுக்க அரிசிச் சோறு முதன்மையான உணவாக இடம் பெற்று வருகிறது.
"சீனப் பெரு நாடு சோறுடைத்து"- என, புதிய மொழியை நாம் சொல்ல வேண்டியதுதான்.