1000895726

மாநில மொழிகளின் உரிமைகளை காப்பாற்றிய திராவிட இயக்கம்

திராவிட இயக்கம் மாநில மொழிகளின் உரிமைகளை பாதுகாத்தது. 

கேரளாவில் உள்ள கோழிக்கோடு நகரத்தில் இன்று மாலை நடைபெற்ற மலையாள மனோரமா இதழின் இலக்கிய கலாச்சார விழாவில் பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி.  

சமஸ்கிருத மொழி தெரிந்தால் மட்டுமே ஆங்கில மருத்துவப் படிப்பு படிக்க முடியும் என்ற பொருத்தமற்ற நடைமுறையை, நூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சியின் ஆட்சி ரத்து செய்தது. அதற்கு பிறகான பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்தி மொழி திணிப்பிற்க்கு எதிராக போராட்டம் நடத்தி அதனை முறியடித்தது. 1930- களில் பெரியார் தலைமையில் நடந்த இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போராட்டமும், 1965- ல் தி.மு.க. நடத்திய இந்தி மொழித் திணிப்பு போராட்டமும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு வழி வகுத்தது. இதனால் தமிழ் நாட்டின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, மாநில சுயாட்சி உரிமை என பல்வேறு உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.


Comment As:

Comment (0)