
கண்ணுக்குத் தெரியாத தூண்டில்
அம்பேத்கார்: பெயர் ஒன்றே போதும்!
- By --
- Thursday, 19 Dec, 2024
*தூண்டிலில் சிக்கிய திமிங்கிலம்*
இந்திய நாடாளுமன்றத்தில், இது பா.ஜ.க வழக்கமாக செய்யும் மடை மாற்றம் தான். - என ஒரு சில நண்பர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இது அவர்கள் செய்த மடைமாற்றம் அல்ல. அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே கால் இடறி விழுந்து விட்டார்கள். இது தான் உண்மை.
அவர்களுடைய மனிதகுல விரோதமான சிந்தாந்தத்தை அவர்கள் நினைத்தது போல அத்தனை எளிதில் நிறைவேற்றி விட முடியவில்லையே என்ற ஏமாற்றத்திலும், தடுமாற்றத்திலும், இதற்கெல்லாம் மேலாக அதிகாரமிக்க பதவி தந்துள்ள அகம்பாவத்திலும் அவர்களின் வாய் தவறி வந்த திமிர்தனமான பேச்சு இது.
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பெயருக்கு இந்திய நாடாளுமன்ற அவைகளில் இருக்கக்கூடிய அசல் வீரியத்தை இப்போது தான் முதல் முறையாக அவர்கள் உணர்கிறார்கள். ( நாமே இப்போது தான் உணர்கிறோம் என்பது தனிக் கதை )
அம்பேத்கார் என்ற பெயர் இந்திய நாடாளுமன்ற அவைகளில் சுற்றிக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூண்டில். இந்த ஜனநாயகத் தூண்டிலின் கூர்மையான பகுதியில் பாசிச ஆட்சியாளர்கள் தானாக வந்து மாட்டிக் கொண்டார்கள்.
இப்போது தான், நமது இந்தியாவின் இறையாண்மை அவர்களை திருப்பி தாக்க தொடங்கி உள்ளது. இதனை நடப்பு எதிர் கட்சிகள் மிகச் சரியாக "காயின் "- செய்து தங்கள் போராட்டத்தை முன் எடுக்க தொடங்கி விட்டன. அதற்கு உரிய குறியீடுகளோடும், உரத்த கோஷங்களோடும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கார் சிலையின் முன்பு ஒன்று கூடி தங்களின் எதிர்ப்புகளையும், அந்த எதிர்ப்பின் வலிமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதே வேளையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசிய அம்பேத்கார் மீதான பொடு போக்கான பேச்சிற்கு தங்களின் எதிர்ப்புகளை அரசியல் கட்சிகள் தேசம் எங்கும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்திய அளவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் வெகு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த போராட்ட சூழலில், இந்தப் போராட்டங்களை கூர்மைப் படுத்தும் வகையிலான இணை உரையாடல்களை இணைய வெளியில் நாம் உருவாக்க வேண்டும். அப்போது தான் இந்தப் போராட்டத்திற்கு உரிய கனபரிமாணம் கிடைக்கும்.
ஜனநாயக வழியில் போராடினால் மட்டுமே இங்கு தேவையான அரசியல் மாற்றங்களை உருவாக்க முடியும். அதற்காக "வாழ்க - ஒழிக!"- என்ற கோஷங்களோடு மட்டும் நின்று விடாமல், வேறு சில ஆக்கப்பூர்வமான உரையாடல்களை பொது வெளியில் ஊடுரு விட வேண்டும். அதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் பற்றியும், அதன் அவசியம் பற்றியும், அதற்கு தலைமை ஏற்று வரைந்து தந்த அம்பேத்கார் பற்றியும், அவருடைய பதவிக் காலத்தில் இந்த தேசம் அடைந்த உன்னதமான மாற்றங்கள் பற்றியும் நாம் ஆணித்தரமாக பேச வேண்டும். அப்போது தான் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கார் என்பவர் ஒரு சமூகத்திற்கான பிரதிநிதி அல்ல. இந்த இந்திய தேசத்தின் கட்டுமானத்தினுடைய " ப்ளூ பிரிண்ட்"-டே அவர் தான் என்ற உண்மைகள் விளங்கும்.
அவருடைய ஒவ்வொரு பங்களிப்புகளையும் பட்டியல் இட்டுப் பேசத் தொடங்கிடுவோம்.....
????
*வண்ணப்பலகை*
( 19, டிசம்பர், 2024)
????????????????????????????????????????????