
அடுத்த அதிபர் யார்?
- By --
- Monday, 04 Nov, 2024
டிரம்ப்பை முந்தும் கமலா ஹாரீஸ். நாளை நவம்பர் 5- ந்தேதி செவ்வாய்கிழமை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
குடியரசு கட்சியின் சார்பாக ட்ரம்ப்பும்,. ஜனநாயக கட்சி சார்பாக பைடனும் களத்தில் மோத வேண்டிய நிலையில், உடல் நிலை காரணமாக பைடன் விலகி விட, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் தேர்தல் களத்தில் நிற்கிறார். முன்னாள் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து நிற்கும் கமலா ஹாரீஸ் ஒரு இந்திய வம்சாவழியினர் என்பது குறிபிடத்தக்கது.
ட்ரம்ப்பை எலான் மாஸ்க்கும், கமலா ஹாரீஸை பில்கேட்ஸ் ஸூம் தீவிரமாக ஆதரிக்கும் நிலையில், தேர்தல் களம் "நெக்-டூ-நெக்" போட்டியாக மாறியுள்ளது இதில் ட்ரம்ப் வழக்கம் போல தனது இனவாதப் பேச்சையும், ராணுவ பலம் பற்றியும் பேச ஆரம்பித்துள்ளார். அதே வேளையில், அங்குள்ள நடுத்தர வர்க்க பிரச்சனைகளை, விலையேற்றம், வரிச் சுமைகள் என அன்றாடப் பிரச்சனைகளை கமலா ஹாரீஸ் பேசி வருகிறார்.
சுமார் 18 வாக்காளர்கள் கொண்ட இந்த அமெரிக்க தேர்தலில், 4 கோடி இயலாத வாக்காளர்கள் தமது தபால் (!) ஓட்டுக்களை செலுத்தி விட்டார்கள். மீதம் உள்ள 14 கோடி வாக்காளர்கள் நாளை நடக்க இருக்கும் தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள்.
ட்ரம்ப்பா ? கமலா ஹாரீஸா ? என்ற போட்டியில், கமலாவின் கையே சற்று ஓங்கி இருப்பதாக தெரிகிறது. அப்படி நம்ம மாநவரத்து கமலாக்கா வெற்றி பெற்று விட்டால், அது
290- ஆண்டு கால அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு வரலாற்று திருப்பு முனையாக அமையும். இதனால், அமெரிக்க ஜனநாயகத்தில் பிற நாட்டு வம்சா வழியினர்களுக்கும் உரிய இடம் உண்டு என இந்த உலகத்திற்கு அறிவிக்கப்பட்டு விடும். மேலும், முதல் பெண் அதிபர் என்ற கூடுதல் சிறப்பும் சேர்ந்து கொள்ளும்.
இன வாதமா? ஜனநாயகமா ? நாளை தெரிந்து விடும்.
ஷரீப். அஸ்கர் அலி