
வட்டி எனும் மாயக்கரம்
மக்களை காக்கும் பொருளாதாரம் எது?
- By --
- Sunday, 15 Dec, 2024
மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தின்
முதல் தொடக்கபுள்ளி
தற்போது, நம்மிடையே நடைமுறையில் உள்ள பொருளாதார அமைப்பு சரியானதுதானா ? நியாயமானதுதானா ?
என்ன இது புது விதமான கேள்வி ?
உலக நாடுகள் பலவும் இந்த பொருளாதார நடைமுறைகளைத் தானே பின்பற்றி வருகிறது.!
சரியல்லாத ஒரு முறையை உலக நாடுகள் கடைபிடிக்குமா என்ன ?
ஆனால், நமக்குத் தெரியாத சில சேதிகள் இங்கு ஒளிந்து கொண்டிருக்கின்றன.
ஆம்! காலத்தால் சற்று பின்னோக்கிப் பார்க்கும் போதுதான் இதில் நமக்கு பல விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும்.
இன்றைக்கு நம்மிடையே நடைமுறையில் உள்ள பொருளாதார முறையானது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பொருளாதார முறையாகும்.
அதாவது உற்பத்தியை சார்ந்து இயங்கும் பொருளாதார முறைமையாகும்.
தொழிற் புரட்சி ஏற்படுவதற்க்கு முன்பாக, உலகத்தின் பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம், அதன் ஒவ்வொரு பகுதியிலும் தன்னிச்சையாகவே நடந்து வந்தது. தனக்குத் தேவையான பொருட்களை மட்டும் தயாரித்தும், தன்னிடம் இல்லாத சில அத்யாவசியமான பொருட்களை உலகின் பிற பகுதிகளிலிருந்து வரவழைத்தும் தன்னை சமன் செய்து கொண்டிருந்தன.
ஆனால், ஐரோப்பிய நாடுகளில் சுழலத் தொடங்கிய ஆலைச் சக்கரங்களின் அதிர்வுகள் உலகின் பல பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.
தன்னிடம் அபரிதமாக உற்பத்தி செய்யப்பட்ட பல் வேறு வகையான பொருட்களை , உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரத்தின் வழியாகவும், அரசியல் அதிகாரத்தின் வழியாகவும் ஐரோப்பியர்கள் பரவச் செய்தனர். அப்போது, அவர்களின் பொருளாதார நடைமுறைகளும் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. அத்துடன் மூலதனப் பொருளாதாரமும் பரவியது.
மூலதனப் பொருளாதாரம் என்பது லாபத்தை அடிப்படையாகக் கொண்டது. அது பொருளாக மாறும் பொழுது அந்தப் பொருளின் மீதான லாபமாக கணக்கிடப்படும். ஆனால், மூலதனமாக மட்டுமே செயல்படும் இடங்களில் அதில் ஒரு கற்பனையான ஊகங்கள் கலந்து விடுகின்றன. அதாவது, அது பொருளாக மாறினால் என்ன லாபம் கிடைத்து இருக்குமோ அதனை ஈடு செய்யும் வகையில், ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்கு, ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை அது தனக்குத் தானே நிர்ணயம் செய்து கொள்கிறது. இதில் முன்னதில் உழைப்புடன் கூடிய பொருளாதார சுழற்சியும், பின்னதில் உழைப்பு ஏதுமற்ற ஊகத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார சுழற்சியும் நடைபெறுகிறது. இதற்குப் பெயர்தான் வட்டியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் என்பது.
ஒரு பொருளாதார நடவடிக்கையானது மூலதனத்தையும், உழைப்பையும் கொண்டிருக்கும் வரைக்கும் அது நம்மை சுமந்து செல்லும் வாகனமாக செயல்படும். அதில் மேற் சொன்ன வட்டிப் பொருளாதாரம் கலக்கும் போது, அந்த வாகனத்தை நாம் சுமந்து செல்லும் தலைகீழான நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால், பொருளாதார வெளியில் மிகப் பெரும் பிளவுகளும், பள்ளங்களும் ஏற்பட்டு விடுகின்றது. இந்தப் பிளவுகளும், பள்ளங்களும் தான் இன்றைக்கு இந்த உலகத்தையே கடுமையாக ஆட்டிப் படைத்தை வருகிறது. நமக்காக பொருள் என்ற நிலை மாறி, பொருளுக்காக நாம் என்ற இக்கட்டுகள் உருவாகி விட்டது.
இந்த ஐரோப்பிய பொருளாதார முறைக்கு மாற்றாக, வட்டியில்லா பொருளாதாரம் என்ற குரல்கள் இப்போது மெல்ல, மெல்ல ஒலிகத் தொடங்கி விட்டன. இதனையே *ஷரியா எக்கனாமிக்* என இஸ்லாமிய நாடுகள் அழைக்கின்றன.
????
*வண்ணப்பலகை*
( 15, டிசம்பர், 2018)
????????????????????????????????????
*ஷரீப், அஸ்கர் அலி*
*நிறங்கள்* மாத இதழ்
????????????????????????????????????