
இனி எல்லாம் சுலபமே!
BSNL அதிரடி: சிம் கார்டே தேவையில்லை
- By --
- Sunday, 17 Nov, 2024
டெல்லி:
பிஎஸ்என்எல் நிறுவனம் முதன்முறையாக சேட்டிலைட் டு டிவைஸ் (satellite-to-device) சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக பிஎஸ்என்எல் கூறியுள்ளது. இதன்படி சிம்கார்டு இல்லாமலேயே சாட்டிலைட்டை பயன்படுத்தி நாம் செல்போன் வாயிலாக மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியும். கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் வியாசாட் ( Viasat) நிறுவனத்தோடு இணைந்து பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. "அம்பானி-யின் அடிமடியில் கைவைக்கும் BSNL.. அப்போ ஏர்டெல் நிலைமை..?!" டைரக்ட் டு டிவைஸ் தொழில்நுட்பம் என்பது எந்த ஒரு கேபிள் இணைப்புகளோ அல்லது மொபைல் டவர்களோ இல்லாமல் சாதனங்கள் நேரடியாக செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டு தகவல் தொடர்பு மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க்கே கிடைக்காத அடர்ந்த வனப்பகுதிகளிலும் கடல் போன்ற பகுதிகளிலும் இருந்து கூட நாம் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியும்.
இந்த புதிய தொழில்நுட்பம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் இயங்கும் செல்போன்களிலும் பயன்படுத்தலாம். இதுவரை நெட்வொர்க்கே கிடைக்காத ரிமோட் பகுதிகளில் கூட நாம் எளிதாக தகவல் தொடர்பு மேற்கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் தான் பிஎஸ்என்எல் நிறுவனமும் Viasat நிறுவனமும் தங்களுடைய சேட்டிலைட் டு டிவைஸ் சேவையை அறிமுகம் செய்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு தீவிரமாக சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் சிறந்த முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. "அசத்தும் BSNL.. ஜியோ, ஏர்டெல்லுக்கே சவால் விடும் திட்டம்..! " மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை இதனை தங்களுடைய எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் முதன்முறையாக இந்தியாவில் சாட்டிலைட் டு டிவைஸ் சேவையை வெற்றிகரமாக சோதித்து விட்டது, இனி இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தகவல் தொடர்பு சாத்தியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்பிளின் ஐபோன் 14 உள்ளிட்ட கருவிகள் வாயிலாக சேட்டிலைட் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. தற்போதைக்கு இந்தியாவில் அரசு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்காக மட்டுமே சாட்டிலைட் போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. பிஎஸ்என்எல் மூலம் இந்த சாட்டிலைட் டு டிவைஸ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவதால் இனி பொதுமக்களும் இந்த சேவையை பயன்படுத்தலாம். இதுவரை டவர்களே நிறுவப்படாத கிராமங்களில் இருந்து கூட இந்த தொழில்நுட்பத்தை சோதனை செய்து பார்த்ததாக பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது.
தற்போதைக்கு இந்த சாட்டிலைட் சேவை வாயிலாக அவசர கால அழைப்புகள் மற்றும் எஸ்ஓஎஸ் மெசேஜ்கள் மற்றும் யுபிஐ பெமென்ட் கூட செய்யலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் வழக்கமான போன் கால்களோ, எஸ் எம் எஸ் அனுப்ப முடியுமா என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சசூன் - முகப்பேர் - சென்னை