aii

ஏஐதான் கோடிங் எழுதுது -சுந்தர் பிச்சை.. அடித்த எச்சரிக்கை மணி

நியூயார்க்: கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை உலகம் முழுக்க உள்ள மென்பொருள் பொறியாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை மணி ஒன்றை அடித்துள்ளார். அதன்படி 25 சதவீத கூகிள் மென்பொருள் இப்போது AI ஆல் எழுதப்படுவதாக அறிவித்துள்ளார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நிறுவனத்தின் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த 2024 மூன்றாம் காலாண்டு மீட்டிங்கில் இது தொடர்பான புள்ளிவிவரத்தை வெளிப்படுத்தினார். "மந்தநிலை.. உலகம் முழுவதும் பறிபோகும் வேலைவாய்ப்புகள்.. அனைத்து துறைகளுக்கும் ஆபத்தா? உண்மை என்ன? " அதில், கூகுளின் புதிய மென்பொருள்கள், இயங்கு தளங்களில்.. 25 சதவீதத்திற்கும் அதிகமானவை இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டு பின்னர் மனித பொறியாளர்களால் ரிவ்யூ செய்யப்படுகின்றன.

மென்பொருள் பொறியாளர்கள், டெஸ்டிங் செய்ய கூடியவர்களுக்கு இதனால் பணி வாய்ப்புகள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. ஆட்டோமேஷன் செயல்திறனை அதிகரிக்கும் அதே வேளையில், வேகமாக பணிகளை செய்யும். இதனால் கோடிங் எழுதும் நேரம் குறையும். அதில் பிழைகளும் குறையும். இனிமேல் கோடிங் எழுதக்கூடியவர்கள் , டெஸ்டிங் செய்ய கூடியவர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் AI-உருவாக்கிய குறியீட்டை மேற்பார்வையிடுதல், செம்மைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பழைய பணி முறைகள் மாறப்போகிறது என்று கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை உலகம் முழுக்க உள்ள மென்பொருள் பொறியாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை மணியை அடித்துள்ளார். "எச்சரிக்கை.. சோஹோ நிறுவன ஸ்ரீதர் வேம்பு மக்களுக்கு வெளியிட்ட ஷாக் வார்னிங்.. என்ன நடந்தது? " வேலையிழப்பு: ஏற்கனவே உலகம் முழுக்க அடுத்தடுத்து பல நாடுகள் மந்தநிலையை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன. ஜப்பான் மந்த நிலைக்குள் சென்றுள்ளதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பு, உற்பத்தி சரிவு காரணமாக ஜப்பானின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் சரிந்துள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்த பொருளாதாரம் கடந்த காலாண்டில் மேலும் சரிந்த நிலையில் எதிர்பாராத விதமாக மந்தநிலைக்குள் சென்றுள்ளது. பொருளாதார பட்டியலில் 2010 இல் அமெரிக்காவிற்குப் பின் இரண்டாவது இடத்தில் இருந்த ஜப்பான் மூன்றாவது பின் தங்கியது. சீனா வேகமாக வளர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் ஜப்பான் இப்போது நான்காம் இடத்திற்கு சென்றுள்ளது. ஜெர்மனி இந்த மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானின் GDP கடந்த ஆண்டு $4.2 டிரில்லியன் அல்லது சுமார் 591 டிரில்லியன் யென் என்ற அளவில் இருந்தது. ஜெர்மனியின் ஜிடிபி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஜெர்மனி ஜிடிபி $4.4 டிரில்லியன் அல்லது $4.5 டிரில்லியன் ஆகும். இதன் மூலம் ஜப்பான் நான்காம் இடத்திற்கு சென்றது மட்டுமின்றி.. பொருளாதார மந்த நிலைக்குள் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

"உலக பொருளாதாரம்.. இன்னும் 12 வருடத்தில் மொத்தமாக மாறப்போகும் இந்தியா? பறந்து வந்த "நல்ல சேதி" " அடுத்த நாடு: அதேபோல் யு.கேவும் மந்த நிலைக்குள் சென்றுள்ளது. கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இங்கிலாந்து மந்தநிலைக்கு சென்றது. ,மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அக்டோபர் மற்றும் டிசம்பர் இடையே 0.3% குறைந்துள்ளது. அங்கே பணவீக்கம் 5.25% ஆக உள்ள நிலையில், ஜிடிபி மேலும் 0.2 சதவிகிதம் குறைந்து மந்த நிலைக்குள் சென்றுள்ளது. மந்தநிலை; ஏற்கனவே 2024ல் உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் - Centre for Economics and Business Research (CEBR) தெரிவித்து உள்ளது. இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், பல்வேறு உலக நாடுகளில் இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளின் மொத்த பொருளாதாரம் 100 ட்ரில்லியனை 2023ல் கடந்து உள்ளோம். Advertisement ஆனாலும் உலக அளவில் 2024ல் பொருளாதார வீழ்த்தி, விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்படும். உலக நாடுகள் அதிக அளவில் கடன் வாங்குவதும், பண வீக்கமும் இதற்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் தங்கள் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது. இந்த கடனுக்கான வட்டியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது உலக அளவில் பொருளாதார மந்தநிலையை வரும் நாட்களில் ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை இழப்பு: 2023ல் இருந்து அதிகரித்து தொழில்நுட்ப துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன.

2024 ஜனவரியில் இது உச்சம் தொட்டுள்ளது.. 2023ல் வருடம் முழுக்க 240,000 வேலைகள் இழக்கப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 50% அதிகமாகும். தொழில்நுட்ப துறைகளில் செய்யப்படும் பணிநீக்கங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. ஜனவரி மாதத்தில் இருந்து ஐடி துறையில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்க தொடங்குவதாகத் தெரிகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது வளர்ச்சியை விட செயல்திறனில் அதிக கவனம் செலுத்துகின்றன, மேலும் சவாலான சந்தை நிலைமைகள், மேற்கு உலக நாடுகளில் நிலவும் மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர்.

ஒரே போன் கால்: உதாரணமாக Frontdesk நிறுவனத்தின் CEO, 2 நிமிட போன் கால் மூலம் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களையும் (200 பேர்) பணிநீக்கம் செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராப்-டெக் நிறுவனமான Frontdesk, 200 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. CEO Jesse DePinto இரண்டு நிமிட Google Meet அழைப்பின் போது இந்த செய்தியை ஊழியர்களிடம் வெளியிட்டார். நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிப்பதற்குப் பதிலாக மாநில ரிசீவர்ஷிப்பிற்கு செல்ல முடிவு செய்துள்ளது.

கூகுள்: அதேபோல் Alphabet இன் கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர், வன்பொருள் மற்றும் பொறியியல் குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கூகுள் தனது விளம்பர விற்பனை குழுவில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பு அறிக்கையில், சில குழுக்கள் இந்த வகையான நிறுவன மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றன, இதில் உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது.

மைக்ரோசாப்ட் : அதேபோல் மைக்ரோசாப்ட் ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட், எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் ஆகியவற்றிலிருந்து 1,900 பேரை வேலையை விட்டு நீக்கி உள்ளது, இது மொத்த மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவில் சுமார் 8% ஆகும். Mike Ybarra and Allen Adham நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை வடிவமைப்பு அதிகாரி ஆலன் ஆதம் கூட நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்.

 


Comment As:

Comment (0)