
திணறும் திருச்சி - சென்னை நெ.சாலை
- By --
- Sunday, 03 Nov, 2024
தொடர் தீபாவளி விடுமுறைக்குப் பிறகு, நெல்லை, மதுரை போன்ற தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள். இதனால் மாவட்டம் தோறும் கூட்டம் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி, நெல்லை - சென்னை வழி மதுரை என முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இன்று இயக்குகிறது.
அதே போன்று கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து முனையத்திலிருந்து 120 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது. இதனால், திருச்சி to சென்னை நெடுஞ்சாலையான GST நெடுஞ்சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலில் திணறிக் கொண்டிருக்கிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் திங்கட்கிழமை பணிகளுக்காக திரும்பி வரும் பல தரப்பு வாகனங்களின் நெரிசல் இன்று மும்மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக, செங்கல்பட்டு புறவழிச்சாலை, பரனூர் சுங்கச் சாவடி, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் என சென்னை நகரத்தின் தென் மேற்கு நுழைவு வாயில் முழுக்க போக்குவரத்து நெரிசலால் மூழ்கப் போகிறது. இத்துடன் பருவ மழையின் தாக்கமும் இணைந்து கொண்டு இறை தேடி வரும் பறவைகளை ஒரு கை பார்க்க காத்திருக்கிறது.
இளஞ்செழியன் - கீழ்பாக்கம் .