1000885677

நகர் வலம் 2017

நகர் வலம் 2017

மிகச் சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

சென்னை மாநகரத்தின் பாரிமுனை (Parry's corner) என்ற வட கிழக்கு மூலையிலிருந்து தான், தமிழகத்தின் எல்லாத் திசைகளுக்குமான  வெளியூர் பேருந்துகள் எல்லாம் புறப்படும்.*

*தொண்ணூறுகளின் கடைசி வரைக்கும் இது தான் நடைமுறையாக இருந்தது.* 
அதற்கு பின்புதான் , இடப் பற்றாக் குறையின் தீவிரத்தை அரசு உணர்ந்தது.

*புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த பிறகு இந்த நகரம் பல வகைகளிலும் நெருக்கடிகளை சத்தித்தது* 

*வாகன நெரிசல், மக்கள் நெரிசல், சரக்கு நெரிசல் என எல்லாத் திசைகளிலும் நெரிசல்கள் பிதுங்கி வழிய ஆரம்பித்தது.* 

*மாநில அரசும், மாநகராட்சி நிர்வாகமும் இந்த நெரிசல்களை சமாளிக்க வேண்டி வேறிடம் தேடி ஓடத் தொடங்கினார்கள்* 

*அப்போது ஒரு சரியான மாற்று இடமாகத் தேர்வான இடம் தான் இந்த "கோயம்பேடு" என்ற புதிய நிலப்பரப்பு.* 

*இந்த இடத்திற்கு முதலில் வந்தது கொத்தவால் சாவடி என்ற காய்- கனி மார்க்கட் தான். அதனைத்  தொடர்ந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும் , இந்த "கோயம்பேடு"- க்கு வந்து விட்டன* 

*இந்த புதிய இடமானது ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமாக 2002- ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  உருவெடுத்தது* 

*அது வரையிலும் , பெங்களூர் "மெஜஸ்டிக்" பேருந்து நிலையம் தான் , ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாக இருந்தது.* 

*அதே வேளையில், இந்த புதிய இடத்தின் கொள் அளவை , பழைய பாரி முனை இடத்தோடு ஒப்பிடும் போதுதான் நமக்கு இந்த புதிய இடத்தின் பரிமாணம் புரியும்* 

*பழைய இடத்தை விடவும், இந்த புதிய இடமானது கிட்டத்தட்ட இருபது மடங்குக்கு மேலாகவே இருக்கும்.* 

*இவ்வளவு பெரிய இடத்தில் எவ்வளவு பேருந்துகளை அரசால் இயக்க முடியும் ?* 

*அப்படி இயக்குவதால் எத்தனை ஆயிரம் பேர்கள் தினசரி இங்கு வந்து போவார்கள்?* 

*இந்த நகரத்தை நோக்கி இப்படி ஒரு பெருங் கூட்டம் எங்கிருந்து வரும் ?* *எதற்காக வரும் ?* 

*இந்தக் கேள்விக்கான விடைகளில் தான் இந்த சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கான விடைகள்  அடங்கியுள்ளது* 

*ஏன் ?, தமிழகத்தின் வளர்ச்சிக்கான விடைகளும் கூட இதில் தான்  அடங்கியுள்ளது* 

*எனவே, இந்த "கோயம்பேடு பேருந்து நிலையம்"- என்பது , ஒட்டு மொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கான குறியீடாக நம்மால் சொல்ல முடியும்* 

*..ம்......போகலாம்... ரைட்*

????

#வண்ணப்பலகை*
( 27, அக்டோபர், 2017 ) 

????????????????????????????????????


Comment As:

Comment (0)