1000940448

சட்ட ரீதியான சாட்டையே இதற்கு சரியான மருந்து

ஏ.ஆர். ரஹ்மானின் அதிரடி அறிக்கை

உலகப் புகழ் பெற்ற ஆல்பம் மற்றும் திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமண வாழ்க்கை, கடந்த 20- ஆம் தேதியன்று "குலா"- எனும் ஷரீயத் முறையில் விவாகரத்து ஆனது. இந்த மணமுறிவு முடிவை  தனது மனைவியின் கண்ணியம் கருதி ஏ.ஆர் ரஹ்மான் ஏற்றுக் கொண்டார். இந்த செய்தி இந்தியா முழுவதிலும் உள்ள அவருடைய ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் கடும் அதிர்ச்சியை தந்தது. அது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. அதில் அவர் மீதான வெறுப்பும், காழ்ப்புணர்வுமே மிகைத்து இருக்கின்றன. 

இந்த எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல, ஏ.ஆர் ரஹ்மானின் இசைக் குழுவில் அவ்வப்போது வந்து போகும் மோகனிடே என்ற பெண் இசைக் கலைஞர் தனது கணவரை அதே நாளில் விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்து விட்டார். உடனே, இந்த இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளையும் முடிச்சுப் போட்டபடி, ஒரு சில யூடியூபர்களும், மெயின்ஸ் ஸ்டீரிம் மீடியாக்களும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடத் துணிந்து விட்டன. 

இப்படிப்பட்ட நிலையில்தான் தனக்கு எதிராக எழுதப்பட்ட, வெளியிடப்பட்ட பொய்யான, தவறான செய்திகளை உடனே நீக்க வேண்டும்.. 1 மணி நேரம் டைம்.. அதற்குள் நீக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ.ஆர் ரஹ்மான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இருவரின் விவகாரத்து தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிட்டும் சில யூ டியூப் சேனல்கள், செய்தி தளங்கள் மோசமான, தவறான கற்பனைகளை செய்திகளால் வெளியிட்டு உள்ளன. நடக்காத விஷயங்களை தங்கள் கற்பனைகளாக வெளியிட்டு உள்ளன.

அதிலும் சில சேனல்கள் கொஞ்சம் கூட உண்மை இல்லாத செய்திகளை .. இரண்டு தரப்பையும் மன அளவில் பாதிக்க கூடிய செய்திகளை வெளியிட்டு உள்ளன. இதில் துளி கூட உண்மை இல்லை. இரண்டு தரப்பின் மனதையும் புண்படுத்தும் விதமாக மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.

இதை அடுத்த 1 மணி நேரத்தில் நீக்க வேண்டும். இல்லையென்றால் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி செய்யாதவர்கள் மீது சட்ட ரீதியாக.. மானநஷ்ட வழக்கு பதியப்படும். அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ. ஆர் ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

5 முக்கிய காரணம்: அவரின் இந்த முடிவிற்கு பின் 5 முக்கியமான காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

1. சில யூ டியூப் சேனல்கள் அவரின் பிரிவிற்கு காரணம் என்று கூறி சில தவறான பர்சனல் விஷயங்களை தவறாக குறிப்பிட்டு இருந்தனர்.

2. ஏ. ஆர் ரஹ்மானின் பிரிவை வேறு சில விவாகரத்து உடன் ஒப்பிட்டு சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.

3. ஏ. ஆர் ரஹ்மானின் பிரிவை மதம் மாற்றம் என்று கூறி சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.

4. அதேபோல் சிலர் இரண்டு தரப்பையும் கடுமையாக விமர்சனம் செய்து, கேலி செய்து செய்திகளை. வெளியிட்டனர்

5. இதெல்லாம் போக ஏ. ஆர் ரஹ்மானின் தனிப்பட்ட ஒழுங்கையும் சிலர் பொய்யாக விமர்சனம் செய்தது இந்த முடிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது

By/ ஷரீப். அஸ்கர் அலி- சீஃப் எடிட்டர். .


Comment As:

Comment (0)