
மின்னிடும் திரைகள்
இந்தியாவின் மிகப் பெரிய பொழுது போக்கு சாம்ராஜ்ஜியம்
- By --
- Wednesday, 06 Nov, 2024
PVR சினிமாஸ். நம்ம தலைநகர் சென்னையில் உள்ள சத்தியம் தியேட்டர் கூட ஒரு PVR சினிமாஸ் ப்ரியா விலேஜ் ரோட்ஷோ-வின் அரங்கம் தான்.
பிரியா எக்ஸ்பிட்டர்ஸ்.
விலேஜ் ரோட்ஷோ
இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சி தான் இந்த PVR. இது இந்தியாவின் மிகப் பெரிய பொழுது போக்கு வணிக சாம்ராஜ்ஜியம். 1997- ஆம் ஆண்டு் புது தில்லியில் உள்ள வசந்த் விஹாரில் தொடங்கப்பட்டது. இன்றைக்கு 2023- டிசம்பர் நிலவரப்படி, இந்தியா மற்றும் அண்டை நாடான இலங்கை உட்பட 114 நகரங்களில், 359 திரை அரங்குகள் வைத்து நிர்வாகம் செய்து வருகிறது. அதில் 1747 திரைகள் உள்ளது.
அகலமான திரை, விசாலமான அரங்கம், துல்லியமான தொழில் நுட்பம், மேம்பட்ட வசதிகள் என இந்த நிறுவனத்தின் அரங்கங்கள்- என, தன்னைத் தேடி வரும் பார்வையாளர்களை பரவசபடுத்தி வருகிறது.
கிள்ளியூர் இளஞ்செழியன்