
மிரட்டும் திரை மொழி
சீனாவுக்குச் செல்லும் விஜய் சேதுபதி
- By --
- Sunday, 17 Nov, 2024
₹1000 கோடி வசூல் செய்ய சீன தேசம் செல்லும் தமிழ் படம்.
திரைப்பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதிபதி, அனுராக் காஷ்யப், நாட்டி, அபிராமி மற்றும் பலர் நடித்த "மஹாராஜ்" திரைப்படம் சீனா நாட்டில் வெளியிடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் மற்றும் படபிடிப்பு குழுவினர் செய்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி நடித்த 50- வது படமான "மஹாராஜ்"- ஜூன் 14- ஆம் தேதி இந்தியாவில் வெளியாகி ₹100 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. இதே படம் OTT தளத்தில் வெளியாகி ₹150 கோடி வரத்து வந்துள்ளதாக அதன் வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவிற்கு வெளியே 10 நாடுகளில் உள்ள OTT - தளங்களில் முன்னிலையில் உள்ளது.
கடந்த 2003- ஆம் ஆண்டில் தென் கொரியாவில் வெளியான "ஓல்ட் பாய்"- படத்திற்கு இணையாக வைத்து இந்தப் படத்தை அயலக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, இப்படத்தின் எடிட்டிங் பேர்ட்டர்ன் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
முன்னணி சீன நிறுவனமான அலிபாபா நிறுவனம் நவம்பர் -29- ஆம் தேதி சீனாவில் இப்படத்தை வெளியிட உள்ளது.
ஜீப்ரா மீடியாஸ் - சென்னை