1000917253

நுண் நிதியியல்

டோட்டல் செக்கப்

1989 -90- களில் நான் பணி செய்து கொண்டிருந்த சென்னை மிராஸ் சாக்ஸ் கம்பெனிக்கு டில்லி பார்ட்டி Mr லால் வந்திருந்தார். அப்போது எங்கள் ஓனருக்கும், ஊழியர்களுக்கும் அரை இருள் உணவகத்தில் மாலை நேர விருந்து வைத்தார். விருந்து முடிந்ததும் எங்கள் மேஜைக்கு சர்வீஸ் செய்த பேரர் பில்லுடன் வந்தார்.  

எங்கள் டில்லி லால் அந்த பில்லின் தொகையை மட்டும் பார்த்து விட்டு + டிப்ஸ் ஆக கணிசமான தொகையும் பணிவுடன் கொடுத்து பேரரை நேசத்துடன் வாழ்த்தி அனுப்பினார்.   

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய மகன் ரஜனீஷ் மக்கட் சென்னைக்கு வந்தார். அதே போலே மாலை நேர பார்ட்டி வைத்தார். நாங்களும் வழக்கம் போல முட்டைக் கோஸ், வெங்காய இலை, ஃப்ரைடு ரைஸ் என சாப்பிட்டு முடித்தோம். அதே போல பில் வந்தது. அதே போல ரஜீனீஷூம் டிப்ஸ் கொடுத்து பேரரை வாழ்த்தி அனுப்பினார். 

ஆனால்..... 

அந்த பேரர் கொண்டு வந்த பில்லை ஒரு முறை டோட்டல் செக் செய்தார். பிறகு பொருட்களின் விலைகளை தெரிந்து கொண்டார். அதே பொருளின் டில்லி விலையை ஒப்பிட்டு பார்த்தார். ஆடம்பர வரி எத்தனை சதவீதம் என்பதை சரி பார்த்தார். இதற்காக ஒரு ஐந்து நிமிடத்தை ஒதுக்கி அத்தனையும் சரி பார்த்த பின்பே பில் தொகையை கொடுத்து அனுப்பினார். 

எங்களுக்கோ! 
இது என்ன இத்தனை பெரிய டில்லி வியாபாரி டோட்டல் செக் செய்கிறாரே?! என ஒரே ஆச்சரியம். 
அமெரிக்கா போய் MBA படித்து வந்தவர் வேறு.  

Why sir - என கேட்ட போது.  

Its a first step of micro management என்றார். 

அப்படி ஒரு புதிய சொல்லை அப்போது தான் முதல் முறையாக கேள்விப்பட்டேன். 

வண்ணப்பலகை 

(13, நவம்பர்,  2024) 


Comment As:

Comment (0)