
மின்னிடும் கரித் துண்டு!
இறக்கை முளைத்த வெளிச்சப் புள்ளிகள்
- By --
- Friday, 15 Nov, 2024
மின்மினி பூச்சிகள் அதன் உடலில் ஒரு இரசாயனக் கூட்டத்தையே வைத்திருக்கிறது. இதன் வயிற்றினுள் ஐந்து விதமான வேதிப் பொருட்கள் இருக்கின்றன.
மின்மினிப் பூச்சிகள் ஒளிர எரிபொருளாக பயன்படுவது "லூசிஃபெரின்" என்ற வேதியியல் கூட்டுப் பொருள்தான்.
இரவாடிப் பறவையான நக்கியும், வெளவால்களும் சில நேரங்களில் மின்மினியை இரையாகப் பிடிக்கும். ஆனால்.... அவைகளால் மின்மினியை உணவாக்கி கொள்ள முடியாது.
மின்மினியின் உடல் நச்சுத் தன்மை வாய்ந்தவை. மேலும் இதன் உடலில் வேதியியல் மூலக்கூறுகள் உள்ளன. தின்றாலும் கரிக்கட்டை போல் எந்த சுவையும் இருக்காது. ஏன்டா இதை தின்றோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டு உடனே கக்கி விடும்.
( கோவை சதாசிவம் அவர்களின் பூச்சிகளின் தேசம் நூலில் இருந்து)