1000896255

சென்னை- திருச்சி எட்டு வழிச் சாலை

சென்னை - to - திருச்சி- க்கு 
எட்டு வழிப் பாதை.

இந்த எட்டுவழிச்சாலை எங்கு தொடங்குகிறது என்றால், சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தொடங்குகிறது. ரூ.26 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்தப்பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விவரங்களை சேகரித்து வரும் நெடுஞ்சாலை அதிகாரிகள், திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறார்கள். அரசின் அனுமதியை பெற்று விரைவில் கட்டுமானப்பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளார்கள்.
இந்த விரைவு சாலை தமிழ்நாட்டின் திருச்சி வரை பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்க உள்ளதால் மிகவும் முக்கியமானதாகும். இதன் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும் போது, சென்னை- திருச்சி இடையே 310 கிலோ மீட்டர் தூர பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னை - சேலம் அதிவிரைவு சாலை முதலில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அதன்பின்னரே சென்னை- திருச்சி அதிவிரைவு சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சென்னை-பெங்களூரு பசுமை அதிவிரைவு சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த சாலையும் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது.! 

குரு ஜெகன் - திருச்சி


Comment As:

Comment (0)