
முடுக்கி விடப்பட்ட அரசு இயந்திரம்
தீவிர டெங்கு ஒழிப்பு....
- By --
- Sunday, 10 Nov, 2024
தமிழ்நாட்டை தாக்கும் டெங்கு காய்ச்சல்.
கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 20 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் தொற்றியுள்ளது. பெய்து வரும் பருவ மழை காரணமாக- சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி உட்பட 10 மாவட்டங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மேற்கண்ட மாவட்டங்களில், டெங்கு கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை ஆய்வக மருத்துவர்கள் பிரிவு மொத்தம் 120 இடங்களில் கண்டறிந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் உடனடியாக சீர்செய்யப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன் படி, மாநில சுகாதாரத் துறை இயக்குர் அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு நிர்வாக ரீதியாக உத்திரவிட்டுள்ளார்.
மேற்கண்ட டெங்கு கொசு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு வேலைகளில் பொது மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கும் படி தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை கேட்டுக் கொள்கிறது.
@சசூன் ஆண்டனி முகப்பேர், சென்னை.